உங்கள் இணையவழி கடன் அறிக்கையை பெறுவது எப்படி?
தனிநபர் இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கை - (Individual Online MyReport)

தனிநபர் இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கை - (Individual Online MyReport) சம்பந்தப்பட்ட தகவல் யாருக்கு பொருந்துகின்றதோ அந்த நபரின் வேண்டுகோளின் பேரில் இணையவழி ஊடாக வழங்கப்படும் கடன் தகவல் அறிக்கை தனிநபர் இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கை (Online MyReport - Individual) என அழைக்கப்படுகின்றது.

பின்பற்ற வேண்டிய படிமுறைகள்
  • திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையில் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரையில் இல. 25, சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01 இல் அமைந்திருக்கும் பணியகத்திற்கு விஜயம் செய்து, முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தை செல்லுபடியாகும் அடையாளத்துடன் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் (சாரதி அனுமதிப்பத்திரம் சம்பந்தப்பட்ட நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொண்டிருத்தல் வேண்டும்) உடன்பட்ட இணையவழி சேவை ஒப்பந்தத்துடன் இணைந்த விதத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கை சேவைக்கென தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.
  • வெற்றிகரமாக பதிவை மேற்கொண்ட பின்னர் இணையவழி MyReport சேவையிலிருந்து இணையவழி MyReport / அணுகுவதற்கான பயனாளர் ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும். .

இணையவழி MyReport சேவைக்கு பதிவு செய்வதன் மூலம் கிடைக்கு பயன்கள் மற்றும் அனுகூலங்கள்
  • MyReport இணையவழி சேவைக்காக பதிவு செய்தல் மற்றும் முதலாவது இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கை கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகின்றது.
  • ஒருவர் தனது MyReport ஐ பெற்றுக்கொள்வதற்கென பணியக அலுவலகத்திற்கு விஜயம் செய்ய வேண்டிய தேவையோ அல்லது ஓர் அங்கத்துவ வங்கிக்கு ஊடாக MyReport விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தேவையோ இல்லை.
  • வரவு அல்லது பற்று அட்டைகள் என்பவற்றை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான ஒரு கொடுப்பனவு முறைக்கு ஊடாக இணையவழி கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
  • பிணக்குகளை இணையம் ஊடாக எழுப்ப முடியும்.
  • மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை வரலாறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

நிறுவன துறை இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கை - (Corporate Online MyReport)

ஒரு வணிகத்தின் / நிறுவனத்தின் உரிமையாளரின் / பங்காளரின் / பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் இணையவழி ஊடாக (Online) வழங்கப்படும் கடன் தகவல் அறிக்கை நிறுவனத்துறை இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கையாகும்; - (Corporate Online MyReport)

பின்பற்ற வேண்டிய படிமுறைகள்
  • ஒரு வணிகத்தின் / நிறுவனத்தின் இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கையைப் பெறுவதற்கென அதன் உரிமையாளரால் / பங்காளரால் / பணிப்பாளரால் ஒரு வர்த்தக வங்கிக்கு ஊடாக அல்லது விசேட வங்கிக்கூடாக மட்டுமே வேண்டுகோள் முன்வைக்கப்பட முடியும்.
  • விண்ணப்பப் படிவம் கிளையின் அதிகாரமளிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியக பாவனையாளரின் பிரகடனத்துடன் / அதிகாரமளித்தலுடன் / அத்தாட்சிப்படுத்தலுடன் எப்பொழுதும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
பின்பற்ற வேண்டிய படிமுறைகள்
படிமுறை 1
படிமுறை 2
படிமுறை 3
படிமுறை 4
 
“முதன்மை பிரதிநிதி (“Primary Delegate”) என்பவர் நிறுவனத் துறை சுய விசாரணை கடன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான அணுகு வசதியைக் கொண்டிருக்கும் நபர் ஆவார். அவர் கட்டாயமாக நிறுவனத்தின் உரிமையாளராக / பங்களாராக / பணிப்பாளராக இருந்து வருதல் வேண்டும். முதன்மைப் பிரதிநிதி விண்ணப்பப் படிவத்துடன் அங்கத்துவ நிறுவனத்தின் கிளை ஒன்றை அணுகுதல் வேண்டும்.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட நிறுவனத்துறை இணையவழி சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தில் கொடுகடன் தகவல் பணியகத்தின் www.crib.lk. இணையத்தளத்தில் அல்லது கிளையில் பெற்றுக்கொள்ள முடியும். நிறுவனத்தின் இறப்பர் இலச்சினையுடன் இணைந்த விதத்தில் அதிகாரமளிக்கப்பட்ட முதன்மை பிரதிநிதி கையொப்பமிடுதல் வேண்டும். அது வணிகப் பதிவுச் சான்றிதழ் படிவம் 01 / படிவம் 20, பெறுமதி சேர் வரி பதிவுச்சான்றிதழ் (எவையேனும் இருப்பின்), முதன்மைப் பிரதிநிதியின் தேசிய அடையாள அட்டை மற்றும் சபைத் தீர்மானம் (“முதன்மை பிரதிநிதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம்”) என்பவற்றின் பிரதிகளுடன் கிளையில் அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் கொடுகடன் தகவல் பணியகத்தின் பாவனையாளரிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
கிளையிலுள்ள அதிகாரமளிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியகத்தின் பாவனையாளர் நிறுவனத்துறை இணையவழி சுய விசாரணைகடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தின் வங்கி பிரகடனப் பிரிவை பூர்த்தி செய்து வணிகச் சான்றிதழ் படிவம் 01 / படிவம் 20 VAT பதிவுச் சான்றிதழ் (எவையேனும் இருப்பின்), முதன்மைப் பிரதிநிதியின் தேசிய அடையாள அட்டை மற்றும் பணிப்பாளர் சபைத் தீர்மானம் என்பவற்றின் பிரதிகளை, மூலப் பிரதிகளுடன் சரி பார்த்து, உண்மையான பிரதிகள் என (வங்கியின் இறப்பர் இலச்சினையுடன்) அத்தாட்சிப்படுத்துதல் வேண்டும் அதிகாரமளிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியகத்தின் பாவனையாளர் மேலே குறிப்பிடப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை செயன்முறைப்படுத்துவதற்கென பணியகத்தின் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
பதிவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பின்னர், முதன்மை பிரதிநிதி நிவனத்துறை இணையவழி MyReport சேவையிலிருந்து தமது நிறுவன இணையவழி MyReport | Bureau Business Service Web Portal க்கு ஊடாக அணுகுவதற்குத் தேவையான பாவனையாளர் பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.