பிரத்தியேக கொள்கை

இந்த இணையத்தளத்தை பார்வையிடும் போது உங்களிடமிருந்தோ அல்லது உங்களைப்பற்றியோ நாங்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை (“தனிப்பட்ட தகவல்கள்”;) ஊசுஐடீ எவ்வாறு பயன்படுத்துகின்ற தென்பதை இந்த இணைய வழி பிரத்தியே கொள்கை விளக்குகின்றது. இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவது நீங்கள் இந்த பிரத்தியேக கொள்கையின் விதி முறைகளை புரிந்து கொள்வதையும் ஏற்றுக்கொள்வதையும் குறிக்கின்றது. நீங்கள் இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதை நிர்வகிக்கும் இந்த பிரத்தியேக கொள்கையானது ஊசுஐடீ இணையத்தள விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது.


தனிப்பட்ட தகவல்கள் எப்போது சேகரிக்கப்படுகின்றன மற்றும் அவற்றை எவ்வாறு நாம் பயன்படுத்துகின்றோம்?

தனிப்பட்ட தகவல் என்பது ஒரு தனி நபரின் அடையாளத்தை அதன் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தொடர்பு பட்ட ஏனைய தகவலுடன் சேர்த்தோ பிரித்தறியும் அல்லது கண்டறியும் தகவல் ஆகும் அல்லது ஒரு தனி நபருடன் தொடர்புபட்டதாகும். பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கடன்ஃபற்று அட்டை இலக்கம், விரல் அடையாளம் என்பன அத்தகைய தகவல்களின் சில உதாரணங்களாகும்.

இந்த இணையத்தளத்தினுள் பிரவேசிக்கும் போது பிரத்தியேக தகவல்களை வழங்குவதற்கு நீங்கள் விரும்பினாலன்றி நாங்கள் அவற்றை சேகரிப்பதில்லை. நீங்கள் எங்களிடம் மேலதிக தகவல்களை கோரி எம்மை தொடர்பு கொள்ளும் வேளையிலேயே பிரத்தியேக தகவல்கள் கோரப்படுகின்றன. இவ்வாறு கோரப்படும் தகவல் பெயரும் மின்னஞ்சல் முகவரியுமாகும்.

உங்களது விசாரணைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் செயற்பட்டு பதிலளிக்கும் வேளைகளில் உங்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே இத்தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. உங்களது விசாரணைகள் அல்லது கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்கும் ஊசுஐடீ அதிகாரிகளினால் மாத்திரமே இத்தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாறாக அவை எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்படுவதில்லை.


பிற இணையத்தளங்களுக்கான இணைப்புக்கள்:

எமது இணையத்தளம் மூன்றாம் தரப்பு இணையத்தளங்கள் மற்றும் சேவைகளுக்கான தொடர்புகள் அல்லது இணைப்புக்களை கொண்டிருக்கலாம். மூன்றாம் தரப்பினர் எத்தகைய தகவல்களை கண்காணிக்கின்றனர் அல்லது சேகரிக்கின்றார்கள் என்பதை நாம் கட்டுப்படுத்துவதில்லை. மூன்றாம் தரப்பு இணையத்தளங்கள் மற்றும் சேவைகளுக்கான எத்தகைய அணுகலும் பயன்பாடும் இந்த பிரத்தியேக கொள்கையால் நிர்வகிக்கப்படவில்லை மாறாக அந்த மூன்றாம் தரப்பினரின் பிரத்தியேக கொள்கைகளினாலேயே நிர்வகிக்கப்படுகின்றன.  

குக்கீஸ் (COOKIES):

குக்கீஸ் என்பவை இணையத்தள உலாவிகளில் தகவல்களை சேமிக்க பயன்படும் சிறிய உரைக்கோப்புகள் ஆகும். பயனர்கள் இயைத்தளத்தை பார்வையிடும் போது இவை உருவாக்கப்படும். தளம் பயனரின் உலாவியில் ஏற்படுவதால் இணையத்தளம் உலாவிக்கு தகவல்களை அனுப்புகின்றது. பின்னர் அது உரைக் கோப்பினை உருவாக்குகின்றது. இணைய உலாவி (உதாரணமாக மைக்ரோ சொஃப்ட், எட்ஜ், மைக்ரோ சொஃப்ட் இன்டர்நெற் எக்ஸ்ப்ளோரர், கூகிள் குறோம், மொஸிலா ஃபயர்பொக்ஸ், சஃபாரி என்பன) அடுத்தடுத்த பார்வையின் போது பயனரை அங்கீகரிப்பதற்கும் ஏதேனும் தனிப்பட்ட விபரங்களை நினைவூட்டுவதற்காகவும் அல்லது பயனர்களின் விருப்ப தேர்வுகளுக்காகவும் இந்த குக்கிகளை மீண்டும் இணையத்தளத்திற்கு அனுப்பலாம். இந்த இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் குக்கிகள் எங்கள் தளத்தில் பார்வையாளர் தொடர்புகளை பகுப்பாய்வு செய்யும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

எனவே இந்த தளத்தின் பயன்பாட்டினை மேலும் மேம்படுத்தவும் இந்த தளத்தில் பயனர் அனுபவத்தை வளப்படுத்தவும் முடியும். இந்த குக்கிகள் பார்வையாளர்களின் எந்தவொரு முக்கியமான தகவலையும் சேகரிப்பதோ அல்லது சேமிப்பதோ இல்லை, பார்வையிட்ட பக்கங்கள் சாதனம்ஃஉலாவி விபரங்கள், ஐபி முகவரி மற்றும் தொடர்பு தொடர்பான பிற விபரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்கள் அல்லது விருப்பத்தேர்வுகள் போன்ற தகவல்களை சேகரிக்காது.

குக்கிகளை முடக்க அல்லது நீக்க அல்லது அவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை தனிப்பயனாக்க விரும்பினால் இது உங்கள் வலைத்தள உலாவி அமைப்புக்களின் மூலம் நடத்தப்படலாம். இதில் தனிப்பயனாக்கத்தின் அளவு வேறுபட்டதாக இருக்கும். இருப்பினும் இது இந்த தளத்தின் குக்கி அபை;புக்களை மட்டும் பாதிக்காது. ஆனால் தளத்தின் அடிப்படையில் குக்கி விருப்பங்களை நீங்கள் தெரிவு செய்யாவிட்டால் உங்கள் உலாவி மூலம் நீங்கள் அணுகும் மற்ற எல்லா தளங்களுக்கும் இது பொருந்தும்.

பாதுகாப்பு:

நீங்கள் வழங்கிய பிரத்தியேக தகவல்களின் இரகசியத்தன்மையையும் நேர்மையையும் தக்க வைத்துக்கொள்ள CRIB உறுதி பூண்டுள்ளது. இந்த தனிப்பட்ட தகவல்களை தவறான பயன்பாடு மற்றும் இழப்பு அங்கீகரிக்கப்படாத அணுகல், மாற்றம் அல்லது வெளிப்படுத்தல் மற்றும் அழிவு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கின்றோம்.

கொள்கையில் திருத்தங்கள்:

இந்த இணையவளி தனியுரிமைக்கொள்கையை எந்த நேரத்திலும் முன்னறிவித்தலின்றி மாற்றுவதற்கான உரிமையை CRIB தனது விருப்பின்படி செய்யலாம். இந்த கொள்கை ஆவணத்தின் கீழே உள்ள 'கடைசியாக புதுப்பிக்கப்பட்டது' என்ற தலைப்பு இந்த ஆவணத்திற்கு மிக சமீபத்திய புதுப்பிப்புகள் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை இடுவதன் மூலம் இந்த கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாற்றங்களைத்தொடர்ந்து நீங்கள் தளத்தை பயன்படுத்துவது இந்த திருத்தப்பட்ட கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்வதையும் ஏற்றுக்கொள்வதையும் குறிக்கின்றது. இந்த கொள்கையின் மிகச் சமீபத்திய திருத்தங்களைப்பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த இந்த இணையத்தளத்தை பயன்படுத்தும் போது அவ்வப்போது இந்த கொள்கையை சரிபாhக்க நாங்கள் உங்களை ஊக்குவிக்கின்றோம்.

கடைசியாக பதுப்பிக்கப்பட்டது 16th ஜுன் 2021 இல்.