தனியுரிமை அறிவித்தல்

1990-ஆம் ஆண்டின் 18 ம் இலக்க இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (இதனகத்துப்பின்னர் “CRIB " எனக் குறிப்பிடப்படும்), ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பாகும். மேலும் இது, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை பெரும்பான்மையான பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ள ஒரு பொது-தனியார் கூட்டாண்மையாகும். மீதமுள்ள பங்குகள் CRIB ன் ஏனைய பங்குதாரர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதே எங்களின் தலையாய முன்னுரிமையாகும். இந்தத் தனியுரிமை அறிவித்தல், எவ்வகையான தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுகின்றன அவை ஏன், எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, மேலும் அவை யார் யாருடன் பகிரப்படுகின்றன அல்லது யார் யாருக்கு தெரியப்படுத்தப்படுகின்றன என்பதனை விபரிக்கிறது. எங்களுடன் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் பகிர்வதற்கு முன்னர், இந்தத் தனியுரிமை அறிவித்தலை பரிபூரணமாக வாசித்து விளங்கிக்கொள்ளுமாறு தயவாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்தத் தனியுரிமை அறிவித்தலானது, 2022 ஆம் ஆண்டின் 09 ம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச்சட்டத்தின் (PDPA) தேவைப்பாடுகளை திருப்தி செய்யும் வகையில் திருத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவது, இந்தத் தனியுரிமை அறிவித்தலின் விதிமுறைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டமையை குறிக்கிறது. இந்தத் தனியுரிமை அறிவித்தல், CRIB பணியகத்தின் இணையத்தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உள்வாங்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளதுடன் இவ்விணையத்தளத்தின் மீதான உங்கள் பயன்பாட்டை ஆளுகை செய்கின்றன.

1. PDPA-இன் கீழ் CRIB-இன் வகிபாகம் யாது?

ஒரு தரவுக் கட்டுப்பாட்டாளர் என்பவர், “சுயமாகவோ அல்லது பிறருடன் கூட்டாகவோ தனிப்பட்ட தரவுகளைச் செய்முறைப்படுத்தலுக்கான நோக்கங்களையும் வழிமுறைகளையும் தீர்மானிக்கும் ஏதேனும் ஒரு இயற்கை ஆள் அல்லது சட்ட ஆள் ஆவார்” என தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (PDPA) வரையறை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரு தரவுச் செயலியானது, தரவுக் கட்டுப்பாட்டாளரின் சார்பாகத் தனிப்பட்ட தரவுகளைச் செய்முறைப்படுத்துகிறது. அந்த வகையில் மேற்கூறிய CRIB சட்டத்தின்படி, தரவுகளைச் சேகரிக்கவும், தொகுக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் CRIB சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொண்டுள்ளது. ஏற்புடையதான தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின்படி, CRIB ஒரு தரவுக் கட்டுப்பாட்டாளராக தகுதி பெறுகின்றது.

இந்தத் தனியுரிமை அறிவித்தலில் காணப்படும் "எங்களை எவ்வாறு தொடர்புகொள்வது?" என்ற பிரிவின் கீழ் தரவுக் கட்டுப்பாட்டாளரின் தொடர்பு விபரங்கள் தரப்பட்டுள்ளன.

2. என்னென்ன தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுகின்றன?

உங்களைப் பற்றிய பல்வேறு வகையான தனிப்பட்ட தரவுகள் மற்றும் /அல்லது பின்வரும் சிறப்பு வகை தனிப்பட்ட தரவுகளை நாங்கள் சேகரித்துச் செய்முறைப்படுத்துவோம்:

  • தனிப்பட்ட அடிப்படைத் தகவல்கள் (முழுப் பெயர், பால், பிறந்த திகதி, பிரஜாவுரிமை, முகவரி போன்றவை)
  • தேசிய அடையாள அட்டை /கடவுச்சீட்டு /சாரதி அனுமதிப்பத்திர விவரங்கள்
  • தொடர்பு விபரங்கள் (உ.ம்: கையடக்க தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி போன்றவை)
  • கல்வி மற்றும் தொழில்முறை அனுபவம் மற்றும் இணைப்புகள்
  • தொழில் விபரங்கள் (உ-ம், வேலைவாய்ப்பு, தொழில்வழங்குநர் விபரங்கள் போன்றவை)
  • வியாபார செயல்பாடுகள் (உ-ம்: உயர் தொழில், வியாபாரம் குறித்த விபரங்கள் போன்றவை)
  • நிதி விபரங்கள் (உ-ம் - வங்கிக் கணக்கு விபரங்கள் போன்றவை)
  • கடன் தகவல்கள் (உ-ம்:பெறப்பட்ட கடன் விபரங்கள், காசோலை விபரங்கள் போன்றவை)
  • இதர தகவல்கள் (உ-ம்: பயன்பாட்டு விபரங்கள், காப்புறுதி விபரங்கள் போன்றவை)
  • ஆளடையாளத்தை உறுதி செய்தல் மற்றும் பின்புல ஆய்வு
  • புகைப்பட மற்றும் காணொளித் தகவல்கள் (புகைப்படங்கள், கண்காணிப்பு கமரா போன்றவை)
  • மரபுவழி தரவு அல்லது உயிரியற்செய்திகளின் ஆயளவைமுறைத்தரவு (பயோ மெற்றிக் டேடா)

நீங்கள் இணையம் ஊடாக பிரவேசிக்கும் பட்சத்தில், மேற்கூறியவை தவிர, கீழ்க்காணும் தரவு வகைகளையும் நாங்கள் சேகரிப்போம்;

  • இணைய விதி முறை முகவரி (IP address)
  • நீங்கள் எங்களை அணுகிய இணையத்தளம்
  • பயன்படுத்தப்பட்ட இணைய உலாவி மென்பொருள் வகை
  • CRIB இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிட்ட பக்கங்கள்
  • CRIB இணையத்தளத்திற்குள் நீங்கள் பிரவேசித்த திகதி, நேரம் மற்றும் கால இடைவெளி- பிற இணையத்தளங்களுக்கான இணைப்புகள்

CRIB இணையத்தளத்தில் மூன்றாம் தரப்பு இணையத்தளங்கள் /சேவைகளுக்கான குறிப்புகள் அல்லது இணைப்புகள் காணப்படலாம். மூன்றாம் தரப்பினர் என்ன தகவல்களைக் கண்காணிக்கின்றனர் அல்லது சேகரிக்கின்றனர் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. அத்தகைய மூன்றாம் தரப்பு இணையத்தளங்கள் / சேவைகளை அணுகுவதும் பயன்படுத்துவதும் இந்தத் தனியுரிமைக் கொள்கையின் ஆளுகையின் கீழ் வரமாட்டாது, மாறாக குறித்த மூன்றாம் தரப்பினரின் தனியுரிமைக் கொள்கைகளின்படியே நிர்வகிக்கப்படும்.

3. தனிப்பட்ட தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கான நோக்கங்கள் மற்றும் சட்டப்பூர்வ அடிப்படை என்ன?

PDPA-வில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பூர்வ அடிப்படையின்படி மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் செய்முறைப்படுத்துவோம்;

  • மேற்கூறிய CRIB சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி CRIB-இன் கடப்பாடுகளை நிறைவேற்றுதல்.
  • பிற சட்டப்பூர்வ கடப்பாடுகளுக்கு இணங்கி ஒழுகுதல் (உ-ம். CRIB சட்டத்தின் கீழ், வரி, கணக்கீடு போன்றவை)
  • ஒப்பந்தங்களை நிர்வாகம் செய்தல்
  • வாடிக்கையாளர்/பயனர் நிர்வாகம் செய்தல்(தொழில்நுட்ப நிர்வாகம்)
  • வியாபார உறவுகளை பராமரித்தல்
  • CRIB குறித்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செய்தல், எமது வியாபார உறவுகள் தொடர்பான பகுப்பாய்வை மேற்கொள்ளுதல்
  • மோசடிகளை தடுத்தல் மற்றும் கண்டறிதல்
  • தரவுக் கட்டுப்பாட்டாளரின் பிற சட்டப்பூர்வ தேவைகள்
  • நீங்கள் குறிப்பாக ஒப்புக்கொண்டுள்ள வேறு ஏதேனும் செய்முறைப்படுத்தல்கள்

மேலே சுட்டிக்காட்டப்பட்ட நோக்கங்களுக்காக, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவுகளை, அவை பெறப்பட்டவாறே (குறிப்பிட்ட CRIB சட்டத்தின் பிரிவு 7அ- வின் படி) நாங்கள் செய்முறைப்படுத்துவோம்;

  • நேரடியாக உங்களிடமிருந்து.
  • உறுப்பு நிறுவனங்களிடமிருந்து (புதுப்பிக்கப்பட்ட பட்டியல் உறுப்பு நிறுவனங்கள் / இலங்கை கடன் தகவல் பணியகத்திடம்) உள்ளது) மற்றும்
  • கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து (உ-ம். இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தொலைத்தொடர்பு சேவைகள் போன்றவை)
  • காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து
  • ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்கள ஆணையாளரிடமிருந்து
  • வியாபாரப் பதிவாளரிடமிருந்து
  • கம்பனிப் பதிவாளரிடமிருந்து

சுயவிபரப்படுத்தல் உட்பட, தன்னியக்கமாக்கப்பட்ட தனிநபர் தீர்மானிக்கும் செயல்முறைகளை நாம் மேற்கொள்ளும்போது, அத்தகைய முடிவுகளை எடுப்பதில் பயன்படுத்தப்படும் அடிப்படைத் தர்க்கத்தையும், அந்தச் செய்முறைப்படுத்தலின் முக்கியத்துவத்தையும், ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் இந்தத் தனியுரிமை அறிவித்தல் வெளிப்படுத்துகிறது.

4. CRIB இணையத்தளத்தில் குக்கீஸ்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?

ஆம், உங்கள் கருவியிலிருந்து முந்தைய தொடர்புகளை அறிந்துகொள்வது மற்றும் அடிக்கடி அணுகப்படும் விடயங்களை கண்டறிவது போன்ற எங்கள் இணையத்தளத்தின் பயன்பாட்டினை நிர்வகிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் குக்கீஸ்கள் எங்களுக்கு உதவுகின்றன. குக்கீஸ் பயன்பாடு குறித்த விரிவான விளக்கம் எங்கள் குக்கீஸ் கொள்கையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது, இது எந்த நேரத்திலும் சம்மதம் தெரிவிப்பது அல்லது எந்த நேரத்திலும் அதனை மீளப்பெறுவது உட்பட உங்கள் தேர்வு விருப்பங்களை மேலாண்மை செய்ய உதவும்.

சேமிக்கப்பட்ட குக்கீஸ் அமைப்புகள் எதிர்கால பிரவேசங்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன; இருப்பினும், CRIB-ன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பக் காரணங்களால், இதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. உதாரணமாக, உங்கள் உலாவியை மீளமைப்பது, குக்கீஸ்ளை அகற்றுவது, அல்லது வேறு உலாவி அல்லது கருவியிலிருந்து இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பது போன்ற செய்கைகள் மூலம் உங்கள் அமைப்புகளை நீங்கள் இழக்க நேரிடலாம். ஏற்புடையதான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, சில நியாயாதிக்கங்கள் முதல் பிரவேசத்தின்போது அல்லது அடுத்தடுத்த பிரவேசங்களின்போது உங்கள் குக்கீஸ் விருப்பத்தெரிவை உறுதிப்படுத்தவோ அல்லது மீளமைக்கவோ உங்களைக் கோரலாம்.

மேலும், பல கணணி உலாவிகள் குக்கீஸ்களை நேரடியாகக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கின்றன. உங்கள் கணணி உலாவி அமைப்புகள் குக்கீஸ் காணப்படும் தளங்களில் குக்கீஸ்கள் (போன்றவை) உள்ளமையை அல்லது அவற்றை ஏற்க வேண்டுமா என்ற தெரிவை பிரதிபலிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்தத் திறன்கள் குறித்த வழிகாட்டுதலைப் பொதுவாக உங்கள் உலாவியின் கையேடு அல்லது உதவி ஆதாரங்களில் காணலாம்.

இதுபோன்ற தொழிநுட்ப அம்சங்கள் இல்லாதவிடத்து, இணையத்தளம் மூலம் வழங்கப்படும் சேவைகள் முழுமையாக கிடைக்காமல் போகலாம், மேலும் சில அம்சங்கள் வினைத்திறனுடன் செயற்படாமல் போகலாம்.

5. உங்கள் தனிப்பட்ட தரவுகளை யார் அணுகுவர்?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு அமைவாக உங்கள் தனிப்பட்ட தரவுகள் கையாளப்படுவதை நாங்கள் உத்தரவாதம் செய்வோம்.

குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக (மேற்கூறிய CRIB சட்டத்தின் பிரிவு 7ஆ-இன் படி) மூன்றாம் தரப்பு தரவுக் கட்டுப்பாட்டாளர்களாகச் செயல்படுமாறு நியமிக்கப்பட்ட தரப்பினருக்கு, அவர்களது கோரிக்கையின் பேரில் உங்கள் தனிப்பட்ட தரவுகள் தெரிவிக்கப்படலாம். உறுப்பினர் நிறுவனங்கள் (புதுப்பிக்கப்பட்ட பட்டியலை உறுப்பினர் நிறுவனங்கள், இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் என்பவற்றில் பெறலாம்)

  • மத்திய வங்கி
  • கடன் வழங்கும் நிறுவனங்கள் (உ-ம். இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, தொலைத்தொடர்பு சேவைகள் போன்றவை)
  • காப்புறுதி நிறுவனங்கள் (உங்கள் அனுமதியுடன்)
  • சர்வதேச கொடுகடன் தகவல் நிறுவனங்கள் (உங்கள் அனுமதியுடன்)

குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக, பொருத்தமான தொழிநுட்ப மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகள் இருப்பதை உறுதிசெய்யும் தரவுச் செய்முறைப்படுத்துநர்களாகச் செயல்படும் பின்வரும் தரப்பினருடனும் நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பகிரலாம்;

  • தொழிநுட்ப ஆலோசகர்கள்
  • வழக்கறிஞர்கள் / சட்ட நிறுவனங்கள்
  • சேவை வழங்கும் நிறுவனங்கள் (உ-ம்: தகவல் தொழிநுட்பம், ஆவண முகாமை, கணணி அமைப்பு வழங்குநர்கள் போன்றவை)

இறுதியாக, பின்வரும் சந்தர்ப்பங்களிலும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் பகிரலாம்.

  • நாங்கள் வழங்கிய ஒரு பண்டம் அல்லது சேவை தொடர்பாக நீங்கள் முறைப்பாடு செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குறைகேள் அதிகாரிக்கு (ஒம்புட்ஸ்மென்) தகவல்களை வெளிப்படுத்துவது உட்பட, சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக.
  • சட்ட அமுலாக்க அலுவலர்கள், அரசாங்க முகவர் நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரசபைகளுக்கு தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம், பொருத்தமான சட்ட அல்லது ஒழுங்குமுறைத் தேவைகளுடன் இணங்கி ஒழுகுவதற்காக.
  • எங்கள் வியாபாரம், சொத்துக்கள் அல்லது பங்குகள் முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியையும் முன்மொழியப்பட்ட அல்லது உண்மையான மறுசீரமைப்பு, இணைப்பு, கையகப்படுத்தல், கூட்டு முயற்சி, ஒப்படைப்பு, பரிமாற்றம் அல்லது பிற வழிகளில் அகற்றுதலுடன் தொடர்புபட்டதாக (நொடிப்பு நிலை அல்லது அதுபோன்ற சந்தர்ப்பங்களின்போது).

உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் செய்முறைப்படுத்தும் அங்கீகாரம் இல்லாத எந்தவொரு தரப்பினருக்கும் நாங்கள் அவற்றை வெளிப்படுத்த மாட்டோம்.

6. எனது தனிப்பட்ட தரவுகள் எங்கு செய்முறைப்படுத்தப்படும்?

உங்கள் தனிப்பட்ட தரவுகள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினரால், தேவைக்கேற்ப உள்ளூரில் செய்முறைப்படுத்தப்படுகின்றன. ஏற்புடையதான தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒப்பந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்முறைப்படுத்துவோம். அத்தகைய தகவல்களைச் செய்முறைப்படுத்துவதற்கான முறையான அங்கீகாரம் இல்லாத எந்தவொரு தரப்பினருக்கும் உங்கள் தனிப்பட்ட தரவுகள் வெளியிடப்படமாட்டாது.

எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றத்தின் போது, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (PDPA) ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகள் பின்பற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

7. உங்கள் தனிப்பட்ட தரவுகள் தொடர்பாக உங்களுக்கான உரிமைகள் யாவை?

ஏற்புடையதான சட்டம் அல்லது ஒழுங்குவிதிகளினால் அனுமதிக்கப்படுமிடத்து உங்களுக்குப் பின்வரும் உரிமைகள் காணப்படுகின்றன:

  • உங்களைப் பற்றி பேணப்படும் தனிப்பட்ட தரவுகளை அணுகுதல் (தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 13).
  • உங்கள் சம்மதத்துடன் உங்கள் தனிப்பட்ட தரவுகள் செயல்முறைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், எந்த நேரத்திலும் உங்கள் சம்மதத்தை மீளப் பெற்றுக்கொள்ளுதல் (தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 14).
  • PDPA-வின் (பிரிவு 14) அட்டவணை I-இன் விடயம் (உ) அல்லது (ஊ) பிரிவில் அல்லது அட்டவணை II-இன் விடயம் (ஊ) பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் உங்கள் தனிப்பட்ட தரவுகளை மேலும் செய்முறைப்படுத்துவதைத் தவிர்க்கும்படி தரவுக் கட்டுப்பாட்டாளரிடம் கோருதல்.
  • துல்லியத்தன்மையை உறுதிசெய்ய உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் நிவர்த்தி செய்தல் அல்லது பூரணப்படுத்துதல்.
  • மேலே கூறப்பட்ட நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவுகள் இனி தேவைப்படாதெனில், அவற்றை எங்கள் பதிவுகளிலிருந்து நீக்கிவிடுதல் (தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 16).
  • தன்னியக்கமாக்கப்பட்ட செய்முறைப்படுத்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு முடிவையும் மறுபரிசீலனை செய்யக் கோருதல் (தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு18).
  • எங்களிடமோ மற்றும்/அல்லது சம்பந்தப்பட்ட தரவுப் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்தல்( (PDPA-வின் அட்டவணை 5-இன் பிரிவு (ஔ)).

மேற்கண்ட உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு, தரவுப் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளவும். (தொடர்பு விவரங்கள் கீழே உள்ள "எங்களைத் தொடர்புகொள்வது எப்படி?" என்ற பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன).

8. உங்கள் தனிப்பட்ட தரவுகள் செய்முறைப்படுத்தப்படுவதை நீங்கள் எவ்வாறு மறுதலிக்கலாம்?

ஏற்புடையதான சட்டம் அல்லது ஒழுங்குவிதிகளுக்குட்பட்டு, உங்கள் தனிப்பட்ட தரவுகள் செய்முறைப்படுத்தப்படுவதை மறுதலிப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அத்தகைய கோரிக்கை கிடைக்கப் பெற்றவுடன், தொடர்புடைய சட்டக் கட்டமைப்பின் கீழ் வேறுவிதமாக அனுமதிக்கப்பட்டாலன்றி, நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் செய்முறைப்படுத்தப்படுவதை நிறுத்தி விடுவோம். மேலே விவரிக்கப்பட்டுள்ள உங்கள் ஏனைய உரிமைகளைப் போலவே இந்த உரிமையையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

9. உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வளவு காலம் பேணலாம்?

உங்கள் தனிப்பட்ட தரவுகளை, அவை சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அல்லது சட்டப்பூர்வ கடமைகளுடன் இணங்கி ஒழுகுவதற்கு தேவையான காலத்திற்கு மட்டுமே நாங்கள் பேணுவோம். உங்கள் தனிப்பட்ட தரவுகள், தேவைப்படும் காலத்திற்குப் பிறகு பாதுகாக்கப்படாமாட்டாது, மேலும் அவை முதலில் பெறப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாகப் பராமரிக்கப்படும்.

10. உங்கள் தனிப்பட்ட தரவுகளை வழங்காவிடின் பின் விளைவுகள் என்ன?
  • உங்கள் விண்ணப்பத்தைச் செய்முறைப்படுத்தப்படுவதை செயலாக்குவதையும் மற்றும் /அல்லது எங்கள் பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் தடை ஏற்படுத்தலாம்.
  • எங்கள் பண்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான உங்கள் விசாரணைகளுக்குப் பதிலளிக்கும் எங்கள் ஆற்றலை பாதிக்கலாம்.
  • எங்கள் இணையத்தளம், இணைப்புகள் அல்லது டிஜிட்டல் தளங்களில் உள்ள சில அம்சங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம்.
  • சலுகைகள், பண்டங்கள், அல்லது சேவை வழங்கல்கள் அல்லது புதிய வெளியீடுகள் குறித்த அறிவிப்புகளை உங்களுக்கு வழங்குவதில் தடையாக அமையலாம்.
  • இதன் விளைவாக, எங்களால் ஏற்பாடு செய்யப்படும் ஊக்குவிப்பு நிகழ்வுகளுக்கான அழைப்புகளிலிருந்து நீங்கள் தவிர்க்கப்படலாம்.
  • உங்களுடன் வினைத்திறனான தொடர்புகளை பேணும் எமது ஆற்றலுக்கு பங்கம் ஏற்படுத்தலாம்.
  • அத்தகைய தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதை அவசியமாக்கும் ஏற்புடையதான சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளுடன் இணங்கி ஒழுகாமையாக அமையலாம்.
11. எங்களைத் தொடர்புகொள்வது எப்படி?

கீழ் வரும் முறைகளில் எம்மை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்

  • தபால் மூலம் :
    தரவு பாதுகாப்பு அலுவலர்
    தரவு பாதுகாப்பு திணைக்களம்
    இலங்கை கொடுகடன் தகவல் பணியகம்
    இல:201, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத
    கொழும்பு -02, இலங்கை

  • தொலைபேசி மூலம்
    0112 13 13 38

  • மின்னஞ்சல் மூலம்:
    privacy@crib.lk
12. இந்தத் தனியுரிமை அறிவித்தலை நாம் எக்கால இடைவெளியில் புதுப்பிக்கிறோம்?

இந்தத் தனியுரிமை அறிவித்தல் காலத்துக்குக்காலம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இருப்பினும், CRIB தனது சுய விருப்பின்பேரில், எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி இந்தத் தனியுரிமை அறிவித்தலை திருத்துவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. இந்தத் தனியுரிமை அறிவித்தலின் கீழே உள்ள "கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது" என்ற தலைப்பு, இந்த அறிவித்தல் இறுதியாக திருத்தம் செய்யப்பட்ட தேதியைக் குறிக்கிறது. இந்தத் தனியுரிமை அறிவித்தலில் மேற்கொள்ளப்படும் எதுவித திருத்தங்களும், திருத்தப்பட்ட உள்ளடக்கம் இவ்விணையத்தளத்தில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும். இத்திருத்தங்களுக்குப் பிறகு நீங்கள் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது, அவ்வாறு திருத்தப்பட்ட தனியுரிமை அறிவித்தலை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளமையை காட்டுகிறது. இந்தத் தனியுரிமை அறிவித்தலில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பற்றித் தெரிந்துகொள்ள, இவ்விணையத்தளத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தத் தனியுரிமை அறிவித்தலை கண்ணுறுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.



கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது - 18 மே 2026