பிணைகளுடன் கூடிய கொடுக்கல் வாங்கல்கள் பதிவேட்டு முறைமைச் சேவை
அசையும் சொத்துக்களின் பிணைகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் கடன்கள் (பிணைகளுடன் கூடிய கொடுக்கல் வாங்கல்கள்) இலங்கையில் வரையறுக்கப்பட்டவையாக இருந்து வருகின்றன.

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் வர்த்தக நியதிகளில் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் மிதமிஞ்சிய அளவிலான இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றன. அசையும் ஆதனங்களை பிணையாக எடுத்து பெறப்படும் கடன்கள் உயர் ஆபத்து மற்றும் கொடுக்கல் வாங்கல் செலவுகள் காரணமாக மிகக் கடுமையான விதத்தில் குறைவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அசையும் சொத்துக்களை பிணைகளாக எடுத்து நிதிப்படுத்தலை வழங்கும் பொழுது கடன் வழங்குநர்கள் கணிசமான அளவில் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலை மற்றும் சம்பந்தப்பட்ட அபாயங்களை எதிர்கொள்கின்றனர். பதிவு முறையில் காணப்படும் தவறுகள் காரணமாக ஒரே ஆதனம் பல்வேறு கொடுகடன் நிறுவனங்களிடம் இரட்டை பிணையாக வைக்கப்படும் நிலை ஒரு பொதுவான அம்சமாகும். கடன் பெறுநர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஊடாக தாமதங்களை விதிக்கக்கூடிய ஆற்றலை கொண்டிருப்பது, கடன் வழங்குநர்களின் நலன்களை மிக மோசமாக பாதிக்கக் கூடிய விதத்திலான தீர்ப்பனவு உடன்பாடுகளுக்கு இணங்க வேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளுகிறது. இந்தக் காரணிகள் கொடுக்கல் வாங்கல் செலவுகளுடன் சேர்ந்து கொடுகடன் செலவுகளை உயர்த்துவதுடன், அசையும் சொத்துக்களை பிணையாக வைத்து கடன்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கும் இடையூறாக இருந்து வருகின்றன.

 

பிணையுடன் கூடிய கொடுக்கல் வாங்கல் பதிவேடு என்றால் என்ன?

இது (இணையத்தில் இருக்கும் அல்லது பௌதீக ரீதியான) ஒரு தரவுத்தளமாக இருந்து வருவதுடன், இதில் பிணைகளை பெற்று கடன்களை வழங்கியிருக்கும் கடன் வழங்குநர்கள் தொழில் முயற்சியின் / தனிநபரின் அசையும் சொத்துக்கள் மீது தாம் கொண்டிருக்கும் பிணை அக்கறைகள் குறித்து அறிவித்தல் வழங்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.

அதன் பிரகாரம், எவையேனும் அசையும் ஆதனங்களை பிணையாக எடுத்து கடன் பெறுநர் ஒருவருக்கு கடன்களை வழங்கும் ஒரு கடன் வழங்குநர் ஒருவர், இந்த பிணை தொடர்பான அக்கறையை கடன் கொடுக்கல் வாங்கல் பூர்த்தி அடையும் சந்தர்ப்பத்தில் பதிவேட்டில் பதிவு செய்வார். கடன் வழங்குநர் அந்தப் பொருட்களை தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அக்கடன் திருப்பிச் செலுத்தப்படாத சந்தர்ப்பத்தில் அந்தச் சொத்தை விற்றுத் தீர்ப்பதற்கான சட்ட உரிமையை பெற்றுக்கொள்வதற்கென அவர் அந்தச் சொத்தின் மீதான பிணை அக்கறையை சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ள முடியும்.

இது எதிர்காலத்தில் கடன்களை வழங்கவிருக்கும் நிறுவனங்களுக்கு முன்னறிவித்தல் வழங்கும். சரக்குகளை கொள்வனவு செய்வதில் அக்கறை கொண்டிருக்கும் ஒருவர் அச்சரக்குகள் மீது ஒரு பிணைப் பொறுப்பு இருந்து வரவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கென கடன் பெறுநரின் தரவுத்தளத்தில் ஒரு தேடுதலை மேற்கொள்ள முடியும்.

 

அசையும் சொத்துக்கள் மற்றும் தொட்டுணர முடியாத பிணைகள் என்பவற்றை பிணையாக எடுத்து வழங்கப்படும் கடன்களின் பகிர்வுக்கு வசதி செய்து கொடுப்பதே இந்த ஒட்டுமொத்த செயற்பாடாகும். இந்த முறைமை சிறப்பாக செயற்படுவதற்கு பின்வரும் அம்சங்கள் தேவைப்படுகின்றன:
  • பிணை அக்கறைகளை உருவாக்குவதற்கென எளிமையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய விதிமுறைகள்.
  • மிக வேகமான, செலவு குறைந்த கோப்பிடல் முறை ஒன்றுக்கு ஊடாக அறிவித்தல்களை தெளிவாகவும், நம்பகமான விதத்திலும் வழங்குதல்.
  • கடன் திருப்பிச் செலுத்தப்படாத சந்தர்ப்பத்தில் அதனை மீள்அறவிடல் மற்றும் பிணைகளை மீளப்பெறுதல் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் வினைத்திறன் மிக்க நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு

மிகச் சிறப்பாக செயற்பட்டு வரும் பிணைகளுடன் கூடிய ஒரு கடனளிப்பு முறை, வேறு விதங்களில் கட்டுபடியாகக் கூடிய கடன் வசதிகளை அணுக முடியாத நிலையில் இருந்து வரும் பரந்த வீச்சிலான நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் நிதியியல் சேவைச் சந்தைகளை கணிசமான அளவில் விரிவாக்குவதற்கு உதவுகின்றது.

மேலும் தகவலுக்கு www.str.lk