உங்களுக்கான எமது பொறுப்பு

அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் எமது அங்கத்தவர்களுக்கு செயற்திறன் மிக்க மற்றும் வினைத்திறன் மிக்க கடன் தகவல்களுடன் இணைந்த விதத்தில் பெறுமதிசேர் சேவைகளை வழங்குவதற்கென கடன் தகவல் பணியகத்தில் நாங்கள் எம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். செயற்படாத கடன் மட்டங்களை மிகக் குறைந்த அளவில் பராமரித்து வரும் அதே வேளையில், விரைவாகவும், இலகுவாகவும் கடன்கள் பெற்றுக்கொள்ளப்படுவதை நாங்கள் இயலச் செய்கின்றோம். மேலும், வங்கித்தொழில் மற்றும் நிதித்துறை என்பவற்றின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதும் எமது நோக்கமாகும்.

கடன் தகவல் பணியகத்தின் பயன்கள் எவை?
  • தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், நிறுவனங்கள் ஆகிய தரப்புக்களுக்கான கடன் வசதிகளை விரைவாக முறைப்படுத்துதல். வேண்டுமென்றே கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களை கடனளிப்பு நிறுவனங்கள் அடையாளம் கண்டு கொள்வதற்கும் கொடுகடன் தகவல் பணியகம் இயலச் செய்கின்றது.
  • முன்னர் பெறப்பட்ட கடன்கள் கடமை உணர்ச்சியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடன்களை வழங்கும் பொழுது சாதகமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கொடுகடன் தகவல் பணியகம் கடனளிப்பு நிறுவனங்களுக்கு உதவுகின்றது. எனவே, கொடுகடன் தகவல் பணியகத்தில் உங்கள் பெயரை வைத்திருப்பது பெருமளவுக்கு பயனளிக்கக் கூடியதாக இருந்து வருகின்றது.

 

உங்களுடைய கடன் அறிக்கை முக்கியத்துவம் பெறுவது ஏன்?

உங்கள் கடன் அறிக்கை பல்வேறு கடன் வழங்குநர்களினால் தொகுக்கப்பட்ட உங்கள் கடன் மீளச் செலுத்துதலைக் காட்டும் வரலாற்றைக் கொண்ட ஒரு பதிவாகும். பெரும்பாலான கடன் வழங்குநர்கள் உங்கள் வேண்டுகோளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்னர், உங்கள் கடன் தகுதியை மதிப்பிட்டுக் கொள்ளும் பொருட்டு உங்கள் கடன் தகவல்களை சரி பார்க்கின்றார்கள். எனவே, கடன்களை திருப்பிச் செலுத்தியிருப்பது தொடர்பான ஒரு சிறந்த வரலாறு எளிதாகவும், விரைவாகவும், சலுகை நிபந்தனைகளுடனும் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

ஒழுங்கான அடிப்படையில் உங்கள் கடன் அறிக்கையை மீளாய்வு செய்வது, உங்கள் கடன் கோப்பில் ஏதேனும் பிழையான தகவல்கள் தரவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அவற்றை தெரிந்து கொள்வதற்கு உங்களை இயலச் செய்வதுடன், அதனை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் உங்களுக்கு வழங்குகின்றது.

உங்கள் கடன் அறிக்கை உங்கள் கடன் தகுதியை நிர்ணயித்துக் கொள்வதற்கு கடன் வழங்குநர்களுக்கு உதவி வரும் காரணத்தினால் விரைவான, பெருமளவுக்கு விருப்பு வெறுப்பற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு அது உதவுகின்றது.

மேலும் இது கடன் வழங்குநர்களுக்கு மத்தியில் உயரளவில் போட்டித்திறன் கொண்ட கடன் சந்தைகள் உருவாகுவதற்கும் வழி வகுக்கும். பணியகம் செயற்பட்டு வரும் நிலையில், பொறுப்பு மிக்க வாடிக்கையாளர்கள் கடன் வழங்கும் நிறுவனங்களிலிருந்து விரைவான, உயரளவில் போட்டித்திறன் கொண்ட சேவை ஒன்றை எதிர்பார்க்க முடியும்.

பொறுப்பு வாய்ந்த, கடன் தகுதியுடன் கூடிய ஒரு சமூகத்தை மேம்படுத்துவதற்கான எமது நோக்கம்

கொடுகடன் தகவல் பணியகம் 80 இலட்சத்திற்கு மேற்பட்ட கன்பெறுநர்களின் கடன் தகவல்களை பராமரித்து வருகின்றது. இந்த அறிக்கை நீங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தும் போக்குகளை உள்ளடக்கிய விதத்தில் உங்கள் முழுமையான கடன் வரலாற்றைக் கொண்டுள்ளது. உங்கள் கடன் தகுதியை மதிப்பீடு செய்யும் பொருட்டு கடன் நிறுவனங்கள் இந்த விபரங்களை பயன்படுத்துகின்றன.


கடன் வசதிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னர் நீங்கள் உங்களுடைய சுய விசாரணை கடன் அறிக்கையை (iReport) பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென நாங்கள் பரிந்துரை செய்கின்றோம். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பின்வருவனவற்றை மேற்கொள்ள முடியும்:
  • கடன் வழங்கும் நிறுவனங்கள் பார்வையிடுவதற்கு முன்னர் உங்களுடைய கடன் நிலையை நோக்குதல்.
  • உங்களுடைய கடன் மீளச் செலுத்தல் பழக்கத்தை ஒரே சீரான விதத்தில் ஆக்கிக் கொள்வதற்கு உதவி பெறுதல்
  • தவறான தரவுகளை நீக்கி, இற்றைப்படுத்தப்பட்ட துல்லியமான ஓர் அறிக்கையை உறுதிப்படுத்துதல்
  • மறைமுகமான பொறுப்புக்களை கண்காணித்தல்
  • ஒழுக்காற்றுடன் கூடிய கடன் பெறுநராக இருந்து வருதல்

எந்தவொரு வங்கிக்கு ஊடாகவும் நீங்கள் விண்ணப்பிப்பதன் மூலமும் உங்கள் iReport இன் ஒரு பிரதியை தபால் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்; அல்லது பெயரளவுத் தொகையான ரூ. 150/- கட்டணத்தை செலுத்துவதன் மூலம் இல. 25, சேர் பாரென் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01 இல் அமைந்திருக்கும் எங்கள் உதவிப் பிரிவிலிருந்து நேரடியாக அதனைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமன்றி “iReport online” சேவைக்கு உங்களை பதிவு செய்து கொள்வதற்கென எங்கள் பணியகத்திற்கு நீங்கள் விஜயம் செய்ய முடியும்.