அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
கொடுகடன் தகவல் பணியகம் (CRIB ) தொடர்பாக

தயவு செய்து www.crib.lk இணையதளத்திற்குச் சென்று மேலும் தகவல்களுக்கென பார்க்கவும்.

(2008ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1990ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க பிரிவு கொடுகடன் தகவல் பணியக) சட்டத்தின் 7 டீ இன் வரைவிலக்கணத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் அங்கத்துவத்தை கோருவதற்கு தகுதியுடையவை ஆகும்.

ஆம். கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அனைத்து அங்கத்துவ நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களின் கடன் தகவல்களை பணியகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சட்ட ரீதியான கடப்பாட்டைக் கொண்டுள்ளன.

கடன் தகவல்கள் தொடர்பாக

இல்லை. நாடெங்கிலும் இருக்கும் அனைத்து அதிகாரமளிக்கப்பட்ட கொடுகடன் நிறுவனங்களினாலும் வழங்கப்பட்டிருக்கும் கடன் தகவல்கள் தொடர்பான ஒரு தரவுத்தளத்தை கொடுகடன் தகவல் பணியகம் பராமரித்து வருகின்றது. எனவே, கொடுகடன் தகவல் பணியகத்தின் அறிக்கை எந்தவொரு அதிகாரம் பெற்ற கடன் நிறுவனத்திலிருந்தும் எவரேனும் தனிநபர் அல்லது நிறுவனம் பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து கடன் வசதிகள் தொடர்பான விபரங்களையும் வழங்குகின்றது. அனைத்து கடன் வசதிகளும், அவற்றின் மதிப்பு, வகை மற்றும் நிலை என்பன என்னவாக இருந்துவந்த போதிலும், கொடுகடன் தகவல் பணியகத்திற்கு அறிக்கையிடப்படுதல் வேண்டும். மாதாந்தம் அத்தகவல்களை இற்றைப்படுத்துதல் வேண்டும்.

ஆம். போதியளவில் நிதிகள் இல்லாத காரணத்தினால் வர்த்தக வங்கிகளினால் திருப்பி அனுப்பப்படும் காசோலைகள் தொடர்பான விபரங்களை இப்பொழுது கொடுகடன் தகவல் பணியகம் கொண்டுள்ளது.

இல்லை.

இல்லை. எவ்வாறிருப்பினும், கிட்டிய எதிர்காலத்தில் அத்தகைய தகவல்களை சேகரிப்பதற்கு பணியகம் திட்டமிட்டு வருகின்றது.

கொடுகடன் தகவல் பணியகத்தின் அங்கத்தவர்களாக இருந்து வரும் அனைத்து வர்த்தக வங்கிகள், விசேட வங்கிகள், அதிகாரமளிக்கப்பட்ட குத்தகை மற்றும் நிதிக் கம்பனிகள் என்பவற்றினால் கடன் தகவல்கள் வழங்கப்படுகின்றன. இத்தகவல்கள் அந்தந்த நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலிருந்து கொடுகடன் தகவல் பணியகத்திற்கு இலத்திரனியல் முறைக்கு ஊடாக மாற்றல் செய்யப்படுவதுடன், ஒவ்வொரு மாத முடிவிலும் அவை புதுப்பிக்கப்படுகின்றன.

இல்லை. அங்கத்துவ நிறுவனங்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பாக மட்டுமே பணியகத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு கொடுகடன் தகவல் பணியகச் சட்டம் அனுமதி வழங்குகின்றது:

  • ஒரு புதிய கடன் வசதி தொடர்பாக ஒரு கடன் பெறுநரை மதிப்பீடு செய்தல்.
  • புதிய கடன் வசதி தொடர்பாக பிணைதாரார் ஒருவரை மீளாய்வு செய்தல்.
  • ஒரு புதிய கடன் வசதிக்கான பங்காளராக / உரிமையாளராக ஒருவரை மதிப்பீடு செய்தல்
  • ஒரு புதிய கடன் வசதிக்கான பணிப்பாளராக மீளாய்வு செய்தல்.
  • ஏற்கனவே இருக்கும் கடன் பெறுநர் ஒருவரை கண்காணித்து, மீளாய்வு செய்தல்.
  • நடைமுறைக் கணக்கு ஒன்றை ஆரம்பித்தல்.

வேறு எந்தக் காரணத்திற்காகவும் கொடுகடன் தகவல் பணியகத்தின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது. அது இச்சட்டத்தின் கீழ் ஒரு குற்றச் செயலாக இருந்து வரும்.

வேறு கடன் வழங்கும் நிறுவனங்கள் வேறுபட்ட விதத்திலான கடனளிப்புக் கொள்கைகள் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்கள் என்பவற்றை கொண்டிருக்க முடியும். எனவே, உங்கள் கடன் விண்ணப்பம் ஒரு நிறுவனத்தினால் நிராகரிக்கப்படும் அதே வேளையில், மற்றொரு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியும். எவ்வாறிருப்பினும், இந்த வகையைச் சேர்ந்த தகவல்கள் பணியகத்திற்கு அறிக்கையிடப்படுவதில்லை.

சுய விசாரணை கடன் அறிக்கை (iReport)

ஆம். இணையவழி ஊடாக உங்கள் சொந்தக் கடன் அறிக்கையை (IReport) பெற்றுக்கொள்வதன் மூலம் அல்லது எந்தவொரு வேலை நாளிலும் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரையில் இல. 25, சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு, 01 இல் அமைந்திருக்கும் வயிட்வெய்ஸ் கட்டிடத்திலுள்ள பணியக அலுவலகத்திலிருந்து உங்கள் கடன் அறிக்கைகைய பெற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் கடன் தகவல்களை பரீட்சித்துப் பார்க்க முடியும். மேலும், தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து, ரூ. 150/- தொகையை செலுத்தி இந்த அறிக்கைக்கான விண்ணப்பத்தினை எந்த ஒரு வங்கிக்கூடாகவும் அத்தாட்சிபடுத்தி அனுப்புவதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். தயவு செய்து மேலும் தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு எமது வாடிக்கையாளர் உதவிப் பிரிவுடன் 011 2 13 13 13 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

பணியகம் ஒரு சுய விசாரணை கடன் அறிக்கையினை (iReport) தயாரிக்காமல் உங்கள் கடன் தகவல்களை வெளிப்படுத்த முடியாது. வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் எழுத்து மூலமான ஒரு வேண்டுகோளின் அடிப்படையில் மட்டுமே அது தயாரிக்கப்பட முடியும். சுய விசாரணை கடன் அறிக்கைக்கான (iReport) வேண்டுகோள் படிவம், தகவல்களை உருவாக்கி வெளிப்படுத்துவதற்கான அதிகாரத்தை பணியகத்திற்கு வழங்குகின்றது. எனவே, தொலைபேசி அழைப்புக்கூடாக நீங்கள் கடன் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது.

ஆம். உங்கள் கடன் அறிக்கையில் அத்தகைய முரண்பாடுகள் இருந்து வந்தால், சம்பந்தப்பட்ட கடனளிப்பு நிறுவனங்களை தொடர்பு கொள்வதன் மூலம் அவற்றை தீர்த்துக் கொள்வதற்கு பணியகம் உங்களுக்கு உதவும். இந்தப் பிணக்குத் தீர்வு செயன்முறை குறித்த மேலும் தகவல்களை நீங்கள் எமது வாடிக்கையாளர் உதவிப் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் கடன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஏதேனும் பொருத்தமின்மையின் அடிப்படையில் தோன்றியிருக்கும் பிணக்கை நீங்கள் எடுத்துக் காட்டும் சந்தர்ப்பத்தில் மட்டுமே கொடுகடன் தகவல் பணியகத்தினால் அத்தகைய நடவடிக்கைகளை துவக்கி வைக்க முடியும்.

இல்லை. பிணக்குகள் தீர்க்கப்பட்ட பின்னர் பணியகம் திருத்தப்பட்ட கடன் அறிக்கையினை கட்டணங்கள் எவையும் இல்லாமல் வழங்கும்.

ஆம்.நீங்கள் இப்பொழுது எமது “iReport Online” சேவைக்கு உங்களை பதிவு செய்து கொள்ள முடியும். இது தொடர்பான மேலும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு தயவு செய்து 011 2 13 13 13 இலக்கத்தில் எமது வாடிக்கையாளர் உதவிப் பிரிவுடன் தொடர்பு கொள்ளவும் அல்லது எந்தவொரு வார நாளிலும் முற்பகல் 9.00 மணிக்கும் பிற்பகல் 3.30 இக்கும் இடையில் பணியகத்திற்கு விஜயம் செய்யவும்.

இல்லை. தனிநபர் ஒருவர் தனது சொந்தக் கடன் அறிக்கையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு செல்லுபடியாகும் ஓர் ஆவணத்தை (தேசிய அடையாள அட்டையை அல்லது கடவுச்சீட்டை, சாரதி அனுமதிப்பத்திரத்தை) சமர்ப்பிப்பதன் மூலம் தனது அடையாளத்தை நிரூபிப்பது அவசியமாகும். எவ்வாறிருப்பினும், மற்றொரு நபரின் சார்பில் (2ஆம் தரப்பு) உரிய விதத்தில் பதிவு செய்ய்பபட்டிருக்கும் Power of Attorney ஒன்றை கொடுகடன் தகவல் பணியகம் ஏற்றுக்கொள்ளும். .

இல்லை. தற்பொழுது நீங்கள் ஒரு வங்கிக்கு ஊடாக மட்டுமே ஒரு சுய விசாரனை கடன் அறிக்கைக்கான வேண்டுகோளை முன்வைக்க முடியும்.

ஆம், தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சுட்டிக்காட்டும் செல்லுபடியாகும் ஒரு கடவுச்சீட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை நீங்கள் சமர்ப்பிக்க முடியும். கடன் தகவல்களை அணுகுவதற்கு உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மிகவும் நிர்ணயகரமானதாக இருந்து வருகின்றது.

ஆம். உங்கள் சொந்தக் கடன் அறிக்கைக்கான (iReport) வேண்டுகோளை முன்வைப்பதன் மூலம் நீங்கள் கடன் எடுத்தவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை விபரம் , முகவரி மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தகவல்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

இது உங்கள் கடன் வசதியை பணியகத்திற்கு அறிக்கையிட்ட நிறுவனத்தின் அலட்சியம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய அடுத்து வந்த மாதாந்த புதுப்பித்தல்களில் சரியான நிலையை புதுப்பிக்கப்படாத காரணத்தினால் இது நிகழ்ந்துள்ளது. இது ஒரு தொழில்நுட்ப தவறு காரணமாக ஏற்பட்டிருக்க முடியும். கொடுகடன் தகவல் பணியகத்தின் தகவல்களை புதுப்பித்தல் செயன்முறை முழுமையாக கணினிமயப்படுத்தப்பட்டிருப்பதுடன், சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் துல்லியமானவையாக இருந்து வருவதையும், நாளது வரையிலான தகவல்களாக இருந்து வருவதனையும் உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பாக உள்ளது. இத்தகைய ஒரு நிலைமையில், ஒரு சுய விசாரணை கடன் அறிக்கையை உருவாக்காது பணியகத்தினால் உங்கள் கடன் தகவல்களை பரீட்சித்துப் பார்க்க முடியாது. சுய விசாரணை கடன் அறிக்கைக்கான வேண்டுகோள் படிவம் இந்த அறிக்கையை தயாரிப்பதற்கும், சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பரீட்சித்துப் பார்ப்பதற்கும் பணியகத்திற்கு அதிகாரமளிக்கின்றது. அறிக்கையின் செயற்பாட்டுச் செலவு மட்டுமே உங்களிடமிருந்து அறவிடப்படும்.

நீங்கள் உங்கள் சொந்த கடன் அறிக்கைக்கென (iReport) வேண்டுக்கோள் விடுத்து, உண்மையான நிலவரத்தை சரி பார்த்துக்கொள்ள முடியும். எவையேனும் முரண்பாடுகள் அவதானிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடனளிப்பு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அதனை திருத்திக்கொள்வதற்கு பணியகம் உங்களுக்கு உதவும். மேலும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கென 0112 13 13 13 இலக்கத்தில் வாடிக்கையாளர் உதவிப் பிரிவுடன் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் பின்வரும் அமைப்புடன் தொடர்பு கொள்ள முடியும். (உபதேசன) கடன் ஆலோசனை நிலையம்

இல.57, ஸ்ரீஜயவர்தனபுர மாவத்தை
ராஜகிரிய
தொடர்பு 0112887006, 0112887007
தொலைநகல்: 0114627154
மின்னஞ்சல்: upadeshana@gmail.com

தனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், பங்குடைமை ஒன்றின் பங்காளர், பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒரு கம்பனியின் பணிப்பாளர் மட்டுமே வணிகத்தின் சார்பில் தனது நிறுவன கடன் அறிக்கை ஒன்றுக்கான (நிறுவனத்துறை iReport) வேண்டுகோளை முன்வைக்க முடியும். வாடிக்கையாளர் உதவிப் பிரிவுக்கு ஒரு வேண்டுகோள் முன்வைக்கப்படும் பொழுது, அத்தகைய தரப்புக்களின் அடையாளம் மற்றும் நிறுவனத் தொடர்புகள் என்பவற்றை பணியகத்தினால் சரி பார்த்துக் கொள்ள முடியாதுள்ளது. எவ்வாறிருப்பினும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுவரும் வங்கியாளர்கள் அவர்களுடைய நிலைமையை எளிதில் சரி பார்த்துக்கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு கடன் தகல்களை வெளிப்படுத்துவதை நிர்வகித்து வரும் சட்ட ஏற்பாடுகளை பணியகம் கண்டிப்பான விதத்தில் பின்பற்றி வருவதுடன், அதன் காரணமாக வாடிக்கையாளர் உதவிப் பிரிவுக்கு ஊடாக கிடைக்கும் நிறுவனத்துறை கடன் அறிக்கைகளுக்கான (iReport) வேண்டுகோள்களை அது ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகைய வேண்டுகோள்கள் எப்பொழுதும் அங்கத்துவ வங்கி ஒன்றுக்கு ஊடாக பணியகத்திற்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

அந்தப் பிரச்சினையை நீங்கள் நிதிசார் ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும். தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இடையிலான எவையேனும் முறைப்பாடுகள் மற்றும் பிணக்குகள் என்பன குறித்து விசாரணை நடத்தி, தீர்த்து வைப்பதற்கான அதிகாரத்தை நிதித்துறை ஒம்புட்ஸ்மன் கொண்டுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ளும் விபரங்கள் பின்வருமாறு:

நிதித் துறை ஒம்புட்ஸ்மன்
ஒம்புட்ஸ்மன் ஹவுஸ்
இல. 143 A வஜிர வீதி
கொழும்பு 05.
தொடர்பு 0112595624
தொலைநகல்: 0112595625
மின்னஞ்சல்: fosril@sltnet.lk
இணையத்தளம்: www.financialombudsman.lk

பொய். கொடுகடன் தகவல் பணியகம் எவரையும் கறுப்பு பட்டியலில் சேரப்பதில்லை. அது வெறுமனே தனிநபர்களினதும் மற்றும் நிறுவனங்களினதும் கடன் தகவல்கள் மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பான பதிவுகள் என்பவற்றை மட்டுமே சேகரிக்கின்றது. அத்தகவல்களை கோரிக்கையின் பேரில் அங்கத்துவ நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.

தவறான கருத்துக்கள்

நிச்சயமாக இல்லை. ஒரு கடன் வசதியை பெறுக்கொண்டிருக்கும் தனிநபரின் அல்லது நிறுவனத்தின் கடன் விபரங்கள் கொடுகடன் தகவல் பணியகத்தில் காணப்படும், உண்மையிலேயே கடன் அறிக்கை ஒன்றில் கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பான நல்ல ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பது, உங்கள் கடன் தகுதியை நிரூபிப்பதற்கு நீங்கள் சமர்ப்பிக்கக் கூடிய மிகச் சிறந்த ஆதாரமாகும். இது மறுபுறத்தில் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெறுநருக்கு கவர்ச்சிகரமான நியதிகள் மற்றும் சலுகை வட்டி விகிதங்கள் என்பவற்றை வழங்குவதற்கு அவற்றைத் தூண்டும்.

விண்ணப்பித்திருக்கும் கடன் பெறுநர் ஒருவருக்கு கடன் வழங்கப்பட வேண்டுமா / வழங்கப்படக் கூடாதா என்பது தொடர்பான எவையேனும் அபிப்பிராயத்தையோ அல்லது கருத்தையோ கொடுகடன் தகவல் பணியகம் முன்வைப்பதில்லை. இது முழுவதுமாக கொடுகடன் நிறுவனத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது.

நீங்கள் உங்கள் கடனை செலுத்தித் தீர்க்கும் பொழுது அல்லது நிலுவைத் தொகைகளை முழுவதுமாக செலுத்தும் பொழுது, உங்கள் புதிய நிலைமை, மாத இறுதியில் கடன் வழங்கும் நிறுவனத்தினால் பணியகத்திற்கு அறிவிக்கப்படும். தனது தரவுத்தளத்தில் சேகரித்து வைத்திருக்கும் எந்தவொரு தரவையும் கொடுகடன் தகவல் பணியகத்தினால் மாற்றியமைக்க முடியாது. இந்தச் செயன்முறை முழுமையாக கணினிமயப்படுத்தப்பட்டிருப்பதுடன், கடன் வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே பணியகத்திலிருக்கும் தமது சொந்தத் தரவுகளை அணுகக்கூடிய நிலையில் இருந்து வருகின்றன. கடன் பெறுநர் ஒருவர் தொடர்பான கடன் தகவல்கள் கடன் முழுமையாக செலுத்தி தீர்க்கப்பட்ட பின்னர் 5 வருடங்களுக்கு அறிக்கையில் வைத்துக் கொள்ளப்படும்.

இல்லை. ஒரு கடனை வழங்குவதற்கான உரிமை முழுவதும் கடனளிப்பு நிறுவனத்திடமே இருந்து வருகின்றது. கொடுகடன் தகவல் பணியகம் ஒரு கடனை பெற்றுக்கொள்வதற்கான உங்கள் தகைமை குறித்த எத்தகைய அபிப்பிராயத்தையும் வழங்குவதில்லை.

கடன்‌ புள்ளியிடல்‌ மற்றும்‌ கடன்‌ தகவல்‌ பணியகத்தின்‌ புள்ளியிடல்‌
கடன்‌ புள்ளியிடல்கள்‌ (Credit Score) என்பவை நீங்கள்‌எடுக்கும்‌ கடன்களை உரிய நேரத்தில்‌ எவ்வாறு திருப்பிச்‌ செலுத்தப்‌ போகிறீர்கள்‌ என்பதனை கடன்‌ வழங்குபவர்கள்‌ அறிந்து கொள்வதற்கு பயன்படுத்தப்படும்‌ கருவிகள்‌ ஆகும்‌. கடன்‌ புள்ளியிடல்கள்‌ சில சந்தர்ப்பங்களில்‌ இடர்‌ புள்ளியிடல்கள்‌ (Risk Score) என்றும்‌ அழைக்கப்படுகின்றன. ஏனெனில்‌, உடன்பட்ட விதத்தில்‌ உங்களால்‌ கடன்களை திருப்பிச்‌ செலுத்த முடியாதிருந்தால்‌, கடன்‌ வழங்கியவர்கள்‌ அது தொடர்பாக எதிர்கொள்ள நேரிடும்‌ இடரை மதிப்பீட்டுக்‌ கொள்வதற்கு அவை உதவுகின்றன.

இன்று நீங்கள்‌ பெற்றுக்கொள்ளும்‌ புள்ளியிடல்‌, கடந்த காலத்தில்‌ நீங்கள்‌ எவ்வாறு கடன்களை கையாண்டு வந்துள்ளீர்கள்‌ என்பதனை பிரதிபலித்துக்‌ காட்டும்‌ ஒரு சித்திரமாகும்‌. கடந்த காலத்தில்‌ நீங்கள்‌ எவ்வாறு உங்கள்‌ கடன்களை முகாமைத்துவம்‌ செய்து வந்துள்ளீர்கள்‌ என்பதன்‌ அடிப்படையில்‌ உங்கள்‌ எதிர்கால நடத்தையை முன்னுணர்ந்து கூறுவதே கடன்‌ புள்ளியிடல்‌ ஆகும்‌.
இந்தப்‌ புள்ளியிடல்‌, உங்கள்‌ கடன்‌ விண்ணப்பப்‌ படிவத்தை மதிப்பீடு செய்யும்‌ பொழுது கடன்‌ வழங்குபவர்கள்‌ பயன்படுத்தக்கூடிய பல தகவல்களில்‌ ஒன்றாகும்‌. உங்களுக்கு கடன்களை வழங்குவதன்‌ மூலம்‌ ஏற்படக்கூடிய இடர்களை நிர்ணயித்துக்‌ கொள்வதற்கென கடன்‌ அளிப்பவர்களுக்கு ஒரு நிறைவான, புறவயமான அளவுகோலை அது வழங்குகின்றது. கடன்‌ புள்ளியிடல்‌ காரணமாக நீங்கள்‌ ஒரு கடனை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்‌. அத்துடன்‌ கடனளிப்பது தொடர்பான தீர்மானமும்‌ நியாயமானதாக இருந்து வர முடியும்‌.

மேலதிக தகவல்களை தயவு செய்து “கடன்‌ புள்ளியிடல்‌ பயன்கள்‌” பிரிவில்‌ பார்க்கவும்‌.
நீங்கள்‌ ஒரு கடனளிப்பு நிறுவனத்திடமிருந்து தனிப்பட்ட கடன்‌, ஈடு அல்லது கடன்‌ அட்டை போன்ற நிதிசார்‌ திட்டமொன்றை பெற்றுக்கொள்வதற்கென விண்ணப்பம்‌ செய்யும்‌ பொழுது கடன்‌ புள்ளியிடல்‌ மிக முக்கியமான ஒரு வகிபாகத்தை வகிக்கின்றது. வங்கிகள்‌ மற்றும்‌ ஏனைய கடனளிப்பு நிறுவனங்கள்‌ என்பன உங்களுடைய நிதிசார்‌ ஆரோக்கியத்தின்‌ நம்பகத்தன்மையை மதிப்பிட்டுக்‌ கொள்வதற்கென இந்தக்‌ கடன்‌ புள்ளியிடல்‌ முறையை பயன்படுத்த முடியும்‌. உங்களுக்கு ஒரு கடனை வழங்குவதற்கென அவர்கள்‌ தீர்மானித்தால்‌, அதன்‌ காரணமாக அவர்கள்‌ எதிர்கொள்ள நேரிடும்‌ இடர்களை புரிந்து கொள்வதற்கு அது அவர்களுக்கு உதவுகின்றது. அத்தியாவசியமாகவே அது உங்கள்‌ நிதிசார்‌ ஆரோக்கியத்தின்‌ ஒரு குறிகாட்டியாக இருந்து வருகின்றது.
கடன்‌ புள்ளியிடல்‌ என்பது கடன்‌ தகவல்‌ பணியகத்தின்‌ தரவுத்தளத்தில்‌ இருந்து வரும்‌ தகவல்களை பயன்படுத்தி, கணிக்கப்படும்‌ ஒரு மூன்று இலக்கப்‌ புள்ளியாகும்‌. அது உங்கள்‌ கடன்‌ அறிக்கையில்‌ உள்ளடக்கப்பட்டிருக்கும்‌ தகவல்களின்‌ ஒரு உப பிரிவாகும்‌. அது குறித்து சிந்தித்துப்‌ பார்ப்பதற்கான வழி, அதனை கடனளிப்பவரின்‌ இடர்‌ வழிமுறை ஒன்றாக நோக்குவதாகும்‌. இந்தக்‌ கடன்‌ புள்ளி எவ்வளவு உயர்‌ மட்டத்தில்‌ இருந்து வருகின்றதோ அது கடந்த காலத்தில்‌ நீங்கள்‌ உங்களுடைய கடன்களை எந்த அளவுக்கு சிறப்பான விதத்தில்‌ முகாமைத்துவம்‌ செய்து வந்துள்ளீர்கள்‌ என்பதனை காட்டுகின்றது. மேலும்‌, கடன்களை வழங்கும்‌ ஒரு நிறுவனத்தை பொறுத்தவரையில்‌ நீங்கள்‌ குறைந்தளவிலான இடர்களை ஏற்படுத்தக்‌ கூடியவர்‌ என்பதனையும்‌ அது காட்ட முடியும்‌.
உங்களுக்கு ஒரு முற்பணத்தை வழங்குவதற்கு அல்லது உங்களுக்கு கடன்‌ ஒன்றை அளிப்பதற்கு தீர்மானிக்கும்‌ பொழுது, கடன்‌ வழங்குபவர்கள்‌ கவனத்தில்‌ எடுத்து வரும்‌ ஒரேயொரு விடயமாக மட்டும்‌ கடன்‌ புள்ளியிடல்‌ இருந்து வரவில்லை. உங்களுடைய கடன்‌ அறிக்கை (Credit Report) பரிசீலனைக்கு எடுத்துக்‌ கொள்ள வேண்டிய விவரங்களை கொண்டுள்ளது. உங்களுடைய கடன்‌ அறிக்கை மற்றும்‌ கடன்‌ புள்ளியிடல்கள்‌ தவிர, உங்கள்‌ மாதாந்த வருமானத்துடன்‌ தொடர்புபட்ட விதத்தில்‌ உங்கள்‌ மொத்தச்‌ செலவுகள்‌, ஏனைய நிதிசார்‌ கடப்பாடுகள்‌, உங்களைப்‌ பற்றிய ஒரு சில சமூக மற்றும்‌ குடிசனவியல்‌ தகவல்கள்‌ மற்றும்‌ ஏனைய காரணிகள்‌ என்பனவும்‌ பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட முடியும்‌.
கொடுகடன்‌ தகவல்‌ பணியகத்தின்‌ புள்ளியிடல்‌ என்பது, கடன்‌ தகவல்‌ பணியகத்தினால்‌ அறிமுகம்‌ செய்து வைக்கப்பட்ட முதலாவது கடன்‌ புள்ளியிடல்‌ ஆகும்‌. அது இலங்கையின்‌ பதிவு செய்யப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ நிதி / குத்தகை கம்பனிகள்‌ என்பவற்றினால்‌ அறிக்கையிடப்பட்டிருக்கும்‌ கடன்‌ தகவல்களை அடிப்படையாகக்‌ கொண்டு கணிக்கப்பட்டிருக்கும்‌ 250 தொடக்கம்‌ 900 வரையிலான மூன்று இலக்கங்களைக்‌ கொண்ட ஒரு புள்ளியாகும்‌. இலங்கை கொடுகடன்‌ தகவல்‌ பணியகம்‌ (CRIB) இரண்டு வகையான புள்ளியிடல்களை வெளியிடுகின்றது;
  • தனிநபர் கொடுகடன்‌ தகவல்‌ பணியகப்‌ புள்ளியிடல்‌ (Consumer CRIB Score)
  • நிறுவன கொடுகடன் தகவல்‌ பணியகப்‌ புள்ளியிடல்‌ (Corporate CRIB Score)
இன்று நீங்கள்‌ பெற்றுக்கொள்ளும்‌ உங்கள்‌ கடன்‌ புள்ளியிடல்‌ கடந்த காலத்தில்‌ நீங்கள்‌ உங்கள்‌ கடன்களை எவ்வாறு கையாண்டு வந்துள்ளீர்கள்‌ என்பதனை பிரதிபலித்துக்‌ காட்டும்‌ ஒரு சித்திரமாகும்‌. கடன்‌ புள்ளியிடல்கள்‌ உங்களுடைய கடன்‌ வரலாற்றின்‌ ஒரு பாகமாக கடன்‌ தகவல்‌ பணியகத்தில்‌ சேகரித்து வைக்கப்படுவதில்லை. அதற்குப்‌ பதிலாக, அப்பணியகத்திடம்‌ ஒரு வேண்டுகோள்‌ விடுக்கப்படும்‌ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்‌ உங்களுடைய புள்ளியிடல்‌ உருவாக்கப்படுகின்றது. உங்கள்‌ கடன்‌ புள்ளியிடல்‌ உங்கள்‌ கடன்‌ வரலாற்றை அடிப்படையாகக்‌ கொண்டு, காலப்‌ போக்கில்‌ மாற்றமடைய முடியும்‌ - அதாவது, தவணைக்‌ கட்டணங்களை தாமதமாக செலுத்துதல்‌, கிடைக்கும்‌ கடன்‌ தொகை மற்றும்‌ அதன்‌ மீது தாக்கம்‌ செலுத்தும்‌ ஏனைய காரணிகள்‌ என்பவற்றை அடிப்படையாகக்‌ கொண்டு அது காலப்‌ போக்கில்‌ மாற்றமடைய முடியும்‌.
இல்லை. கடன்‌ தகவல்‌ பணியகத்தின்‌ புள்ளியிடல்‌ என்பது கடன்‌ தகவல்‌ பணியகத்தினால்‌ அறிமுகம்‌ செய்து வைக்கப்பட்டிருக்கும்‌ ஒரு பெறுமதிசேர்‌ சேவையாகும்‌ (தீர்மானங்களை எடுக்கும்‌ கருவியாகும்‌). உங்கள்‌ தனிப்பட்ட கடன்‌ அறிக்கை (iReport) தொடர்ந்தும்‌ இருந்து வருவதுடன்‌, அதனை கடன்‌ தகவல்‌ பணியகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்‌.
உங்கள்‌ கடன்‌ அறிக்கையில்‌ உள்ளடக்கப்பட்டிருக்கும்‌ பல்வேறு வகைகளைச்‌ சேர்ந்த கடன்‌ தரவுகளை பயன்படுத்தி, கடன்‌ தகவல்‌ பணியகத்தின்‌ புள்ளியிடல்கள்‌ கணிக்கப்படுகின்றன. அவை முதன்மையாக பின்வரும்‌ காரணிகளை அடிப்படையாகக்‌ கொண்டுள்ளன:
  • கடந்த காலத்தில்‌ கடன்களை திருப்பிச்‌ செலுத்தியிருக்கும்‌ விதம்‌.
  • மிதமிஞ்சிய அளவில்‌ கடன்பட்டிருக்கும்‌ நிலை.
  • குடிசனவியல்‌ விபரங்கள்‌.
  • கிடைக்கும்‌ கடனை பயன்படுத்தும்‌ விதம்‌.
  • பிணையாளர்களின்‌ ஒப்பந்தங்கள்‌.
  • கணக்கில்‌ காசு இல்லாமல்‌ திருப்பி அனுப்பப்பட்டிருக்கும்‌ காசோலைகள்‌ தொடர்பான விவரங்கள்‌.
  • கடனளிப்பு நிறுவனங்களினால்‌ மேற்கொள்ளப்பட்டிருக்கும்‌ விசாரணைகள்‌.
  • நீங்கள்‌ ஒரு கடனளிப்பு நிறுவனத்தில்‌ புதிய கடன்‌ வசதி ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தால்‌ அந்த நிறுவனம்‌ அவற்றை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் / அல்லது நீங்கள்‌ ஏற்கனவே ஒரு வாடிக்கையாளராக இருந்து வந்தாலும்‌ அவற்றை அணுக முடியும்‌.
  • அந்தப்‌ புள்ளியிடலை நீங்களும்‌ பெற்றுக்கொள்ள முடியும்‌.
  • தனிநபர் கொடுகடன்‌ தகவல்‌ பணியகப்‌ புள்ளியிடல்‌ அறிக்கையை (Consumer CRIB Score Report) பணியகத்திலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்‌. அல்லது ஒரு வங்கியின் ஊடாக அதற்கு விண்ணப்பம்‌ செய்ய முடியும்‌ - இந்தத்‌திட்டம்‌ இதுவரையில்‌ துவக்கி வைக்கப்படவில்லை.
  • 'நிறுவன கொடுகடன்‌ தகவல்‌ பணியகப்‌ புள்ளியிடல்‌' அறிக்கையை (Corporate CRIB Score Report) பணியகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்‌. ஆனால்‌, அதற்கென ஒரு வங்கியின் ஊடாக மட்டுமே விண்ணப்பம்‌ செய்ய முடியும்‌ - இது தொடர்பான திட்ட அபிவிருத்தி இன்னமும்‌ பூர்த்தியடையவில்லை.
  • மாதிரி விண்ணப்பப்‌ படிவங்கள்‌ தொடர்பாக எமது தரவிறக்கங்கள்‌ (Downloads) பிரிவை பார்க்கவும்‌
இல்லை. பின்வரும்‌ இரு சந்தர்ப்பங்களில்‌ உங்கள்‌ கொடுகடன்‌ புள்ளியிடல்‌ தகவல்‌ பணியகத்தினால்‌ கணிக்கப்படமாட்டாது :
  • எமது பதிவுகளில்‌ / தரவுத்தளத்தில்‌ உங்களை குறித்த போதுமான அளவிலான, தேவைப்படும்‌ அளவிலான தகவல்கள்‌ இல்லாதிருத்தல்‌; அல்லது
  • உங்களுடைய கடன்‌ தொகுப்பு எமது பதிவுகளில்‌ / தரவுத்தளங்களில்‌ இல்லாதிருத்தல்‌.
விளக்கங்கள்‌ மற்றும்‌ குறிப்பு வழிகாட்டி, என்பவற்றுடன்‌ வழங்கப்பட்டிருக்கும்‌ மாதிரி கடன்‌ தகவல்‌ பணியக புள்ளியிடல்‌ (தனிநபர் / நிறுவனம்) அறிக்கைகளுக்கென எமது தரவிறக்கங்கள்‌ (Downloads) பிரிவை பார்க்கவும்‌