சுய விசாரணை கடன் அறிக்கை (iReport) - தனிநபர்

யாருக்கு அந்த தகவல் பொருந்துகின்றதோ அந்த நபரின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படும் கடன் தகவல் அறிக்கை சுய விசாரணை கடன் அறிக்கை (iReport) - தனிநபர் என அழைக்கப்படுகின்றது. (1995ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க சட்டம் மற்றும் 2008 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றினால் திருத்தப்பட்டவாறான) 1990ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க கொடுகடன் தகவல் பணியக சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த அறிக்கைக்கான ஒரு வேண்டுகோளை முன்வைக்க முடியும். இந்த அறிக்கை, குறித்த தனிநபரினால் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கொடுகடன் வழங்கும் நிறுவனத்திலிருந்தும் பெறப்பட்டிருக்கும் அனைத்து கடன் வசதிகளும் தொடர்பான சாதகமான மற்றும் எதிர்மறையான விபரங்களை உள்ளடக்குகின்றது.

பின்வரும் படிமுறைகளை பயன்படுத்துவதற்கு ஊடாக எந்தவொரு தனிநபரும் தனது சுய விசாரணை கடன் அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும்:
  • பணியகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்து சுய விசாரணை கடன் அறிக்கையை பெற்றுக்கொள்ளல் :
    சுய விசாரணை கடன் அறிக்கையை (iReport) பெற்றுக் கொள்வதற்கென திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையில் முற்பகல் 9.00 தொடக்கம் பிற்பகல் 3.30 வரையில் அலுவல் நேரங்களின் போது இல. 25, சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01 இல் அமைந்திருக்கும் கொடுகடன் தகவல் பணியகத்தின் அலுவலகத்திற்கு விஜயம் செய்ய வேண்டும். சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவம் உரிய விதத்தில் நிரப்பப்பட்டு, அடையாளத்தை நிரூபிப்பதற்கான செல்லுபடியான ஆவணத்துடன் செல்லுபடியாகக் கூடிய தேசிய அடையாள அட்டையை / செல்லுபடியாகக் கூடிய கடவுச் சீட்டை அல்லது செல்லுபடியாகக் கூடிய சாரதி அனுமதிப் பத்திரத்தை (சாரதி அனுமதிப்பத்திரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். சமர்ப்பித்து, அறவிடப்படும் கட்டணத்தையும் செலுத்துதல் வேண்டும்).
  • ஒரு வர்த்தக வங்கிக்கு ஊடாக / விசேட வங்கிக்கு ஊடாக அல்லது சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தல் :
    தனிநபர் சுய விசாரணை கடன் அறிக்கை ஒன்றுக்கான வேண்டுகோளை முன்வைப்பதற்கு பணியகத்தின் அலுவலகத்திற்கு வர விரும்பாதவர்கள் அல்லது வர முடியாத நிலையில் இருப்பவர்கள் நாடெங்கிலும் இருக்கும் ஏதேனும் ஒரு வர்த்தக வங்கிக்கு அல்லது விசேட வங்கிக்கு ஊடாக இந்த சுய விசாரணை கடன் அறிக்கைக்கான வேண்டுகோளை முன்வைத்து, பதிவுத் தபாலில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பின்பற்ற வேண்டிய படிமுறைகள்
படிமுறை 1
படிமுறை 2
படிமுறை 3
படிமுறை 4
படிமுறை 5
படிமுறை 6
பணியத்தின் அங்கத்துவம் பெற்றுள்ள ஏதேனும் ஒரு வர்த்தக வங்கியின் அல்லது விசேட வங்கியின் கிளையை சுய விசாரணை கடன் அறிக்கை படிவத்துடன் அணுகவும்.
உரிய விதத்தில் பூர்த்தி செய்யப்பட்ட சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தை கொடுகடன் தகவல் பணியகத்தின் www.crib.lk இணையத்தளத்தில் அல்லது கிளையில் பெற்றுக் கொள்ளலாம். தனது செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையின் / செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் (சாரதி அனுமதிப்பத்திரம் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்) புகைப்படப் பிரதிகளுடன் கிளையின் அங்கீகாரம் பெற்ற கொடுகடன் தகவல் பணியக பாவனையாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
கிளையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியகப் பாவனையாளர் சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தின் வங்கிப் பிரகடனப் பிரிவை பூர்த்தி செய்வது அவசியமாகும். அத்துடன் குறிப்பிட்ட நபரின் தேசிய அடையாள அட்டையின் / கடவுச்சீட்டின் அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தின் பிரதியை, அவற்றின் மூலப் பிரதிகளை பரீட்சிப்பதன் மூலம் அத்தாட்சிப்படுத்துதல் வேண்டும் (வங்கியின் இறப்பர் இலச்சினையுடன்).
அங்கீகரிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியகப் பாவனையாளர் பூர்த்தி செய்யப்பட்ட சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தை அத்தாட்சிப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின், கடவுச்சீட்டின் அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் கொடுப்பனவு வைப்புச் சீட்டுடன் பணியகத்திற்கு அனுப்பி வைப்பது அவசியமாகும்.
ஆவணங்கள் கிடைத்த பின்னர் பணியகம் தனிநபர் சுய விசாரணை கடன் அறிக்கையை தயாரிக்கும்.
சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தில் தரப்பட்டிருக்கும் அஞ்சல் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.