வரலாறு

நட்புடன் கூடிய வாடிக்கையாளர் கொடுகடன் தகவல் களஞ்சியமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியகம், கடன் வசதிகளை வழங்கி வரும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் அனைத்து கடன் பெறுநர்கள் மற்றும் எதிர்காலத்தில் கடன்களை எதிர்பார்பவர்கள் தொடர்பான கடன் மற்றும் நிதித் தகவல்களை சேகரிப்பதற்கான தென்னாசிய பிராந்தியத்தின் முதலாவது நிறுவனமாகும். இலங்கையில் 1990ஆம் ஆண்டில் எமது பயணம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் நாங்கள் நினைவில் நிற்கும் பல சிறப்பு கட்டங்களை கடந்து வந்துள்ளோம். இலங்கையில் கடன் குறியீட்டு முறையொன்றை ஸ்தாபிக்கும் எமது இலக்கு அதன் ஒரு பெறுபேறாகும்.

2021

  • 07வது 'குலோபல் பிஸ்னஸ் அவுட்லுக்' விருதுகள் வழங்கும் விழாவில் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்திற்கு தென் ஆசியாவின் சிறந்த புதுமைக்கான கடன் தகவல் பணியகம் என்ற விருது வழங்கப்பட்டது.


2020

  • கொவிட் 19 தொற்று காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் (Online) மூலம் தனது கடன் அறிக்கையை பெற்றுக்கொள்ளும் சேவையான ஒன்லைன் iReport (Online iReport) சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.


2019

  • கொடுகடன் தகவல் பணியகத்தின் முதலாவது கடன் புள்ளியிடல் முறையான “CRIB Score” 2019 டிசம்பர் மாதம் அங்கத்துவ கொடுகடன் நிறுவனங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


2018

  • அபிவிருத்திகளை ஆரம்பிப்பதற்கென புதிதாக தெரிவு செய்யப்பட்ட தொழில்நுட்ப பங்காளர் நிறுவனமான (Credit info International Gmbh) நிறுவனத்துடன் 2018 ஜனவரி மாதத்தில் கொடுகடன் தகவல் பணியகம் ஒப்பந்தங்களில் கைச்சாதிட்டது.
  • கொடுகடன் தகவல் பணியகம் 2018 அக்டோபர் மாதத்தில் பொது மக்களுக்கான (நிறுவன துறை) “இணையவழி கடன் அறிக்கை” (“Corporate iReport online”) சேவையை ஆரம்பித்து வைத்தது.


2017

  • கொடுகடன் தகவல் பணியகத்தின் நேரடி தரவு நிலையம் பெருமளவுக்கு பாதுகாப்பான, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் 3 அடுக்கு வசதியொன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


2016

  • நுண்பாக கடனளிப்பு தொடர்பான ஒரு புதிய கொடுகடன் அறிக்கை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


2015

  • கொடுகடன் தகவல் பணியகம் அதன் 25ஆவது ஆண்டு நிறைவை 2015 மே மாதம் கொண்டாடியது.
  • தகவல் தொழிநுட்ப முறைமை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (2ஆவது) கட்டம் துவக்கி வைக்கப்பட்டது. .


2013

  • கொடுகடன் தகவல் பணியகம் 2013 அக்டோபர் மாதத்தில் சுய விசாரணை, “இணையவழி கடன் அறிக்கை” - தனிநபர் (iReport Online) சேவையை பொதுமக்களுக்காக ஆரம்பித்து வைத்தது.


2011

  • அனர்த்த மீட்பு நிலையத்தின்” ஸ்தாபிதம் பூர்த்தி செய்யப்பட்டது.
  • கடன்களை வழங்கும் பொழுது பிணைகளாக பயன்படுத்தப்படும் அசையும் ஆதனங்கள் தொடர்பான பிணை அக்கறைகளை பதிவு செய்யும் நோக்கங்களுக்கென கொடுகடன் தகவல் பணியகம் 2011 ஆகஸ்ட் 1ஆம் திகதி ஒரு புதிய பதிவேட்டை ஆரம்பித்தது.li>


2010

  • வர்த்தக வங்கிகளினால் நிராகரிக்கப்பட்ட காசோலைகள் தொடர்பான விபரங்களை சேகரித்தல் 2010 ஜனவரி மாதம் துவக்கி வைக்கப்பட்டது.
  • கடன் தகவல்கள் தொடர்பான வாடிக்கையாளர் பிணக்குகளை கையாள்வதற்கான “வாடிக்கையாளர் உதவி விசேட பிரிவு” 2010 டிசம்பர் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
  • புதிதாக இயற்றப்பட்ட “2010ஆம் ஆண்டின் 42ஆம் இலக்கு பிணைகளுடன் கூடிய கொடுக்கல் வாங்கல் சட்டத்தின்” கீழ் “பிணைகளுடன் கூடிய கொடுக்கல் வாங்கல்கள் பதிவேடு (STR) ஸ்தாபிக்கப்பட்டது.


2009

  • பணியகத்தின் சேவைகளின் பரப்பெல்லைகளை விரிவாக்குவதனை நோக்கமாகக் கொண்ட (2008ஆம் ஆண்டின் 42ஆம் இலக்கச் சட்டத்திற்கான) வரைபுத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • சுய விசாரணை கடன் அறிக்கை (iReport) சேவை 2009 டிசம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்சேவையின் ஊடாக தனிநபர்களும், வர்த்தக நிறுவனங்களும் பணியகத்திலிருந்து தமது சொந்த கொடுகடன் அறிக்கைகளை அணுகுவதற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு இடமளிக்கப்பட்டது.


2008

  • கொடுகடன் தகவல் பணியகம் தன்னியக்க கொடுகடன் தகவல் முகாமைத்துவ முறையை (CRIMS) 2008 ஜனவரி மாதம் துவக்கி வைத்தது.


2006

  • தொழில்நுட்ப பங்காளர் ஆளு. MS. Dun And Bradstreet தகவல் சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து தன்னியக்கமாக்கல் கருத்திட்டம் 2006 ஆகஸ்ட் மாதம் துவக்கி வைக்கப்பட்டது.


2005

  • கொடுகடன் தகவல் பணியகத்தை நவீனமயமாக்கும் கருத்திட்டம் மற்றும் வேண்டுகோள் யோசனைகளை (Request Proposal – PRF) வழங்கும் திட்டம் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கி வைக்கப்பட்டது.


2004

  • இலங்கை மத்திய வங்கி, கொடுகடன் தகவல் பணியகம் மற்றும் உலக வங்கி என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட தென்னாசியாவின் முதலாவது கொடுகடன் பணியகங்களின் மாநாடு 2004 மே மாதம் கொழும்பில் இடம்பெற்றது.


1997

  • கடன் அட்டை கொடுப்பனவுகளை செலுத்தத் தவறியவர்கள் தொடர்பான தகவல்களை அறிக்கையிடுவதற்கென பணியகம் புறம்பான ஒரு முறைமையை ஆரம்பித்து வைத்தது.


1996

  • 1996 ஜனவரி 31ந் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி குண்டு வெடிப்பின் விளைவாக பணியகத்தின் அலுவலகம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், வேறு இடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தரவுகள், கொடுகடன் தகவல் பணியகம் மிகக்குறுகிய காலத்தில் அதை மீள ஸ்தாபித்துக் கொள்வதற்கும், அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும் உதவின.


1995

  • இலங்கை மத்திய வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றைச் சேர்ந்த சட்ட ஆலோசகர்களை உள்ளடக்கிய குழு 1992 இல் இச்சட்டத்திற்கென வரைபுத் திருத்தங்களை சமர்ப்பிப்பதுடன், அவை 1995 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.


1993

  • ஆண்டுக்கு இரு முறையிலிருந்து மாதாந்த இடைவெளிகளில் பதிவுகளை புதுப்பிக்கும் (Updating) செயற்பாடு 1993 ஜனவரி முதலாந் திகதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


1992

  • 1992 ஜனவரி முதலாந்திகதி தொடக்கம் பணியகத்தினால் வழங்கப்படும் கடன் அறிக்கைகளுக்கு ஒரு கட்டணத்தை அறவிடுவது என பணிப்பாளர் சபை முதலில் முடிவு செய்தது.
  • தொலைநகல் மற்றும் தபால் என்பவற்றுக்கு ஊடாக விநியோகிக்கப்படும் ஓர் அறிக்கைக்கான கட்டணம் முறையே ரூ. 35/- மற்றும் ரூ. 20/- என நிர்ணயிக்கப்பட்டது.


1991

  • உரிமம் பெற்ற கடன் வழங்கும் 24 நிதிக் கம்பனிகள் நிறுவனங்களின் பங்காளர் அங்கத்துவர்களாக பணியகத்தில் இணைந்து கொண்டன.


1990

  • இலங்கை கொடுகடன் தகவல் பணியகமானது 1990 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க சட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் முதலாவது பணிப்பாளர்களின் கூட்டம் 1990 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 06 ஆம் திகதி நடைபெற்றதுடன் அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • ரூபா.500,000 மேலதிகமான முறையாக கடனை செலுத்த தவறியவர்களின் தகவல்களை சேகரிக்க 1990 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் தகவல் முறைமை ஸ்தாபிக்கப்பட்டது.
  • பணிப்பாளர் சபையின் முதலாவது தலைவர் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான கலாநிதி எஸ்.டீ.ஜீ. பெர்னன்டோ ஆவார்.
  • முதலாவது கடன் அறிக்கை அங்கத்துவ கடன் நிறுவனங்களுக்கு 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலவசமாக வழங்கப்பட்டது.