சுய விசாரனை கடன் அறிக்கை (iReport) - நிறுவன துறை

ஒரு வணிக நிறுவனத்தின்; உரிமையாளரின் / பங்களாரின் / பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படும் கடன் தகவல் அறிக்கை சுய விசாரணை கடன் அறிக்கை – நிறுவனத்துறை என அழைக்கப்படுகின்றது. இந்த அறிக்கையை (1995 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 2008 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றினால் திருத்தப்பட்டவாறான) 1990 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை கொடு கடன் தகவல் பணியக சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பெற்றுக்கொள்ள முடியும். நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கை எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கொடுகடன் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டிருக்கும் அனைத்து கடன் வசதிகள் தொடர்பான சாதகமான மற்றும் எதிர்மறையாக தகவல்களை வழங்குகின்றது.

அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய படிமுறைகள்
  • நிறுவன துறை சுய விசாரணை கடன் அறிக்கைக்கான வேண்டுகோளை (iReport) ஒரு வர்த்தக வங்கிக்கு ஊடாக அல்லது விசேட வங்கிக் ஊடாக மட்டும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் / பங்காளர் / பணிப்பாளர் முன்வைக்க முடியும்.
  • நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவம் எப்பொழுதும் கிளையின் அங்கீகரிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியக பாவனையாளரினால் மேற்கொள்ளப்படும் பிரகடனத்துடன் / அங்கீகாரமளித்தலுடன் / அத்தாட்சிப்படுத்தலுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
  • நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவங்கள் எவையும் நேரடியாக பணியகத்தின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட முடியாது.

 

சுய விசாரணை கடன் அறிக்கையை (iReport) பெற்றுக்கொள்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் மற்றும் அனுகூலங்கள் (iReport)
  • சுய விசாரணை கடன் அறிக்கை, சம்பந்தப்பட்ட நபர் / நிறுவனம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்துகின்றது. கடன் வழங்கும் நிறுவனங்களிடம் சாதாரண கடன் அறிக்கைகள் சமர்ப்பிக்கும் பொழுது அத்தகைய தகவல்கள் பொதுவாக வழங்கப்படுவதில்லை. இத்தகவல்கள் கடன் பெறுநர்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட நபர் பிணையாளியாக இருந்து வருகின்றாரா? என்ற விடயம், கடந்த ஆறு மாத காலப் பிரிவின் போது சம்பந்தப்பட்ட நபரின் கடன் அறிக்கையினை பார்வையிட்டிருக்கும் நிறுவனங்களின் பெயர், சம்பந்தப்பட்ட நபருக்கு கடன் வசதிகளை வழங்கியிருக்கும் அனைத்து கடன் நிறுவனங்களினதும் பெயர்கள் முதலியவற்றை உள்ளடக்குகின்றன. .
  • சுய விசாரணை கடன் அறிக்கை, ஒரு கடனுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னர் தனது கடன் நிலவரத்தை சிறந்த விதத்தில் தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஒரு தனிநபருக்கு அல்லது நிறுவனத்திற்கு உதவுகின்றது. தனிநபருக்கு அல்லது நிறுவனத்துக்கு அறிக்கையில் காணப்படும் ஏதேனும் பொருத்தமின்மையை அல்லது பிணக்கினை நிவர்த்தி செய்து, தீர்த்து வைக்கக் கூடிய இயலுமை கிடைக்கின்றது. பிணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துவர முடியும். மேலும், பிணக்குகளை கையாளும் படிவத்திற்கு ஊடாக (DHF) கொடுகடன் தகவல் பணியகத்திடம் பிணக்கினை தீர்த்து வைப்பதற்கான ஒரு வேண்டுகோளை முன்வைக்க முடியும்.
  • ஒரு தனிநபர் / நிறுவன கடனளிப்பு நிறுவனத்துடன் சிறந்த விதத்தில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய சிறந்த நிலையில் இருந்து வருவதுடன், தனது கடன் வசதி தொடர்பாக சிறப்பான நியதிகளை பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய நிலையிலும் இருந்து வருகின்றார்.
  • சுய விசாரணை கடன் அறிக்கை ஒரு தனிநபருக்கு அல்லது நிறுவனத்திற்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் பழக்கத்தை ஒரே சீரான விதத்தில் ஆக்கிக் கொள்வதற்கும், மறைமுகமான பொறுப்புக்களை கண்காணிப்பதற்கும், ஒழுக்காற்றுடன் கூடிய ஒரு கடன் பெறுநராக இருந்து வருவதற்கும் உதவுகின்றது.
பின்பற்ற வேண்டிய படிமுறைகள்
படிமுறை 1
படிமுறை 2
படிமுறை 3
படிமுறை 4
படிமுறை 5
 
ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளர் / பங்காளர் / பணிப்பாளர் பணியகத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள வர்த்தக வங்கியின் அல்லது விசேட வங்கியின் ஏதாவதொரு கிளையை நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்துடன் அணுகுதல் வேண்டும்.
கொடுகடன் தகவல் பணியகத்தின் www.crib.lk அல்லது கிளையில் பெற்றுக்கொள்ளக் கூடிய நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தை உரிய விதத்தில் பூர்த்தி செய்து கம்பனியின் இறப்பர் இலச்சிணையுடனான அதிகாரமளிக்கப்பட்ட ஓர் உரிமையாளரின் /பங்காளரின் / பணிப்பாளரின் கையொப்பத்துடன் வணிக பதிவுச் சான்றிதழ், படிவம் 01 / 20 மற்றும் பெறுமதிச்சேர் வரி (VAT) பதிவுச்சான்றிதழ் (எவையும் இருப்பின்) என்பவற்றின் பிரதிகளுடன் கிளையின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பாவணையாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
கிளையின் அதிகாரமளிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியகத்தின் பாவனையாளர் நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தின் வங்கிப் பிரகடனப் பிரிவை பூர்த்தி செய்து, வணிகப் பதிவுச் சான்றிதழ், படிவம் 01 / படிவம் 20 மற்றும் (VAT) பதிவுச் சான்றிதழ் (எவையும் இருப்பின்) என்பவற்றின் பிரதிகளை அவற்றின் மூலப் பிரதிகளை பரிசீலித்து பார்த்து உண்மைப் பிரதிகள் என வங்கியின் இறப்பர் இலச்சிணையுடன் இணைந்த விதத்தில் அத்தாட்சிப்படுத்துதல் வேண்டும்.
அதிகாரமளிக்கப்பட்ட கொடுகடன் தகவல் பாவனையாளர் பூர்த்தி செய்யப்பட்ட நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவம், அத்தாட்சிப்படுத்தப்பட்ட வணிகப்ப பதிவுச் சான்றிதழ், படிவம் 01 / படிவம் 20 மற்றும் VAT பதிவுச்சான்றிதழ் (எவையும் இருப்பின்) என்பவற்றையும் கொடுப்பனவு வைப்புச் சீட்டுடன் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் துணை ஆவணங்கள் என்பன கிடைத்த பின்னர், பணியகம் அவற்றை முறைப்படுத்தி, நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கையை தயாரிக்கும். அது நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கை விண்ணப்பப் படிவத்தில் தரப்பட்டிருக்கும் நிறுவனத்தின் அஞ்சல் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.