கொடுகடன் தகவல் முகாமைத்துவ முறைமை (CRIMS)

எமது கொடுகடன் தகவல் முகாமைத்துவ முறைமை (CRIMS) 2006 – 2010 காலப் பிரிவின் போது அறிமுகப்படுத்தப்பட்ட எமது நவீனமயமாக்கல் கருத்திட்டத்தின் (கட்டம் 1) ஒரு பாகமாக அதிநவீன உட்கட்டமைப்பு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைமை அங்கத்துவர்களுக்கும், பொது மக்களுக்கும் கூட கொடுகடன் தகவல் சேவைகளை வழங்குகின்றது. கொடுகடன் தகவல் பணியகத்தில் நாங்கள் வழங்கும் கடன் அறிக்கைகள் CRIMS முறைமையின் முதன்மைத் திட்டமாக இருந்து வருவதுடன், எமது அங்கத்துவ நிறுவனங்கள் விரைவானதும் விருப்பு வெறுப்பற்ற கடனளிப்புத் தீர்மானங்களை எடுப்பதற்கு அவை உதவுகின்றன.

அதிநவீன கொடுகடன் தகவல் முகாமைத்துவ முறைமை ஒன்றில் முதலீடு செய்வதன் எமது முதன்மை நோக்கம், எமது கடன் அறிக்கைகளில் பகிர்ந்தளிக்கப்படும் கொடுகடன் தகவல்களின் தரத்தை விருத்தி செய்வதாகும். செயற்பாட்டு பிரிவுகளில் பின்பற்றப்பட்ட கையால் இயக்கப்படும் செயன்முறை காரணமாக கொடுகடன் தகவல் பணியகம் அதிகமான பிணக்குகளை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. இது எமது ஸ்தபானத்தின் அடிப்படை நோக்கத்திற்கு சவால் விடுத்ததுடன், இறுதியில் எமது சேவைகளின் நாணயத்தின் மீது ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனவே, சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற கொடுகடன் பணியக செயலியான CRIMS எமது தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் எமக்கு பெருமளவுக்கு துணை புரிந்துள்ளது. தகவல் பாதுகாப்பு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மிகப் பிந்திய முன்னேற்றங்களின் பக்கபலத்துடன், சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் வர்த்தக ரீதியில் உணர்திறன் மிக்க நிதித் தரவுகளை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு நாங்கள் கொடுகடன் தகவல் பணியகத்தில் உயரளவிலான பாதுகாப்பு கொள்கைகளையும், நடைமுறை சார்ந்த வழிகாட்டுதல்களையும் இரு அந்தங்களிலும் பயன்படுத்தி வருகின்றோம்.