கடன் தகவல் அறிக்கைகள்

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தில் நாங்கள் எமது அங்கத்துவர்களிடமிருந்து கடன் தகவல்களை சேகரித்து, அத்தரவுகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என்பவற்றுக்கு அவற்றின் வேண்டுகோளின் பேரில் விநியோகம் செய்கின்றேம். இத்தரவுகள் கடன் தகவல் அறிக்கைகள் வடிவில் விநியோகம் செய்யப்படுகின்றன.

ஒரு கடன் தகவல் அறிக்கை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான விடயம் சார் தகவல்களை உள்ளடக்குகின்றது. இத்தகவல்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மற்றும் கடன் தொடர்பான விபரங்கள் (கடன் வகை, வழங்கப்பட்ட தொகை உச்ச வரம்பு, நிலுவையில் இருக்கும் தொகை, இறுதியில் புதுப்பிக்கப்பட்ட திகதி மற்றும் அத்தகைய கடனின் நிலை முதலியவை).

நாங்கள் இரு வகையான கடன் தகவல் அறிக்கைகளை வழங்குகின்றோம்;
அங்கத்துவர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான கடன் தகவல் அறிக்கைகள்
  • அனைத்துமடங்கிய வாடிக்கையாளர் கடன் அறிக்கைகள்.

  • வாடிக்கையாளர் நுண்பாக கடன் அறிக்கைகள் .


நிறுவன துறை அனைத்துமடங்கிய கடன் அறிக்கை
  • கடன் புள்ளியிடல் அறிக்கை - தனிநபர்

  • கடன் புள்ளியிடல் அறிக்கை – நிறுவனம்

  • தனிநபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடன்கள் தொடர்பான விபரங்களை ஒரு தனிநபரின் கடன் அறிக்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடன் தொடர்பான விபரங்களை, நிறுவன துறை கடன் அறிக்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் ஒரு வங்கியிலிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடனளிப்பு நிறுவனத்திலிருந்து கடன்களை பெற்றுக் கொண்டிருக்காத நிலையில், நாங்கள் சம்பந்தப்பட்ட நபர் / நிறுவனம் தொடர்பாக எமது தரவுத்தளத்தில் தகவல்கள் எவையும் இல்லை என்பதனை குறிப்பிடும் No-Hit அறிக்கை ஒன்றை வழங்குகின்றோம்.
  • “CRIB SCORE” என அழைக்கப்படும் எமது கடன் புள்ளியிடல் முறை, கடன் அபாய முகாமைத்துவ துறையில் உலகளாவிய ரீதியில் செயற்பட்டு வரும் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஐஸ்லாந்தைச் சேர்ந்த Credit info International நிறுவனத்துடனான தொழில்நுட்ப கூட்டுச் செயற்பாட்டிற்கு ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
  • கொடுகடன் தகவல் பணியகத்தின் புள்ளியிடல் (CRIB Score) என்பது 250 தொடக்கம் 900 வரையிலான ஒரு புள்ளியாகும். அது சம்பந்தப்பட்ட கடன்பெறுநர் தொடர்பான அபாய மட்டம், அவருடைய கடன் தகுதி மற்றும் கடனை திருப்பிச் செலுத்தாதிருக்கக்கூடிய நிகழ்தகவு என்பவற்றுக்கான ஒரு குறிகாட்டியை கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்குகின்றது. இத்தகைய கடன் புள்ளிகள் கடன் மதிப்பீடு மற்றும் கடனளிப்பு என்பவற்றை துரிதப்படுத்துவதற்கும், “நன்மதிப்பு வாய்ந்த பிணைகளை” வழங்குவதன் ஊடாக வங்கித் துறையுடன் சம்பந்தப்படாதவர்களுக்கு கடனளிப்பை விரிவாக்குவதற்கும் உதவியுள்ளன. மேலும், வங்கிகள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் என்பவற்றின் கடன் மற்றும் அபாய மதிப்பீட்டுச் செயன்முறைகளை பலப்படுத்துவதற்கும் இவை உதவியுள்ளன. இது ஆரோக்கியமான கடன் தொகுப்புக்களை உறுதிப்படுத்துவதுடன், செயற்படாத கடன்கள் மற்றும் கடன்களை செலுத்தத் தவறும் விகிதங்கள் என்பவற்றை குறைக்கின்றது.