கொடுகடன் தகவல் பணியகத்தின் புள்ளியிடல் அறிக்கைகள் - தனிநபர்

கடன் புள்ளியிடல் என்பது, ஒரு தனிநபர் தொடர்பாக கடன் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சூத்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் கணித ரீதியில் கணிக்கப்படும் ஓர் இலக்கமாகும். இந்த கடன் புள்ளியிடல் (Credit Score) அத்தகைய கடன் புள்ளி யாருக்கு பொருந்துகின்றதோ அந்த நபருக்கு, வேண்டுகோளின் பேரில் ஓர் அறிக்கையின் வடிவில் வழங்கப்படுகின்றது.

கடன் புள்ளியிடல் என்பது, 250 தொடக்கம் 900 வரையிலான மூன்று எண்களைக் கொண்ட இலக்கம் ஒன்றாகும். உயர் கடன் புள்ளி, கடனளிப்பவர்களுக்கு குறைந்தளவிலான கடன் ஆபத்தை எடுத்து வருவதுடன், குறைந்தளவிலான கடன் புள்ளி உயரளவிலான கடன் ஆபத்துக்கு வழிகோலுகின்றது. கடன் புள்ளியிடல் முறை பின்வரும் பிரதான கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சூத்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் கணிக்கப்படுகின்றது:

  • திருப்பிச் செலுத்தும் நடத்தை
  • மிதமிஞ்சிய அளவில் கடன்பட்டிருக்கும் நிலை
  • குடிசனவியல் விபரங்கள்
  • கிடைக்கும் கடனை பயன்படுத்தும் விதம்
  • விசாரணைகள்
  • உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள்
  • திருப்பி அனுப்பப்பட்ட காசோலைகள்
CRIB Score Logo
பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள்
படிமுறை 1
படிமுறை 2
படிமுறை 3
 
கடன் புள்ளியிடல் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கு பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள், சுய விசாரணை கடன் அறிக்கை ஒன்றை (iReport) பெற்றுக்கொள்வதற்கு பின்பற்ற வேண்டியிருக்கும் நடைமுறைகளுக்கு இணையானவையாகும். பணியகத்தின் அலுவலகத்திற்கு விஜயம் செய்வதன் மூலமோ அல்லது அங்கத்துவ வங்கி ஒன்றுக்கு ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலமோ இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது தனது சுய விசாரணை கடன் அறிக்கையை (iReport) பெற்றுக்கொள்ள விரும்பும் தனிநபர் ஒருவர் மட்டுமே பணியகத்திலிருந்து “கொடுகடன் தகவல் பணியகத்தின் புள்ளியிடல் அறிக்கைக்கு” விண்ணப்பம் செய்ய முடியும்.
கொடுகடன் தகவல் பணியகத்தின் கடன் புள்ளியிடல் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கும், சுய விசாரணை கடன் அறிக்கைகளுக்கான அதே விண்ணப்பப் படிவங்களே பயன்படுத்தப்படுகின்றன. இரு அறிக்கைகளுக்கும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.