கொடுகடன் தகவல் பணியகத்தின் புள்ளியிடல் அறிக்கைகள் – நிறுவனத்துறை

கடன் புள்ளி என்பது ஒரு நிறுவனம் தொடர்பாக கடன் வழங்கும் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூத்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் கணித ரீதியில் கணிக்கப்படும் ஓர் இலக்கமாகும். இந்தக் கடன் புள்ளி எந்த நிறுவனத்துக்கு பொருந்துகின்றதோ அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் / பங்காளரின் / பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் ஓர் அறிக்கையின் வடிவில் வழங்கப்படுகின்றது.

கடன் புள்ளி என்பது 250 தொடக்கம் 900 வரையிலான வீச்சைக் கொண்ட 3 புள்ளி இலக்கமொன்றாகும். ஓர் உயர் கடன் புள்ளி கடனளிப்பவர்களுக்கு குறைந்தளவிலான கடன் ஆபத்தை எடுத்து வருவதுடன், குறைந்தளவிலான கடன் புள்ளி உயரளவிலான கடன் ஆபத்துக்கு வழிகோலுகின்றது.

CRIB Score Logo
பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள்
படிமுறை 1
படிமுறை 2
படிமுறை 3
 
கடன் புள்ளி அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கென பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள், சுய விசாரணை கடன் அறிக்கை ஒன்றை (iReport) பெற்றுக்கொள்வதற்கு பின்பற்ற வேண்டியிருக்கும் படிமுறைகளுக்கு இணையானவையாகும். கடன் வழங்கும் அங்கத்துவ வங்கி ஒன்றுக்கு ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலமே அதனை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது தமது நிறுவனத்துறை சுய விசாரணை கடன் அறிக்கையை (iReport) பெற்றுக்கொள்ள விரும்பும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் / பங்காளர் / பணிப்பாளருக்கு மட்டுமே பணியகத்திலிருந்து “கொடுகடன் தகவல் பணியகத்தின் புள்ளியிடல் அறிக்கைக்கு” விண்ணப்பம் செய்ய முடியும்.
கொடுகடன் தகவல் பணியகத்தின் புள்ளியிடல் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கும் சுய விசாரணை கடன் அறிக்கைகளுக்கான அதே விண்ணப்பப் படிவங்களே பயன்படுத்தப்படுகின்றன. இரு அறிக்கைகளுக்கும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.