விதிமுறைகளும் நிபந்தனைகளும்

இலங்கை கடன் தகவல் பணியக இயைத்தளத்திற்கு (இதன் பின்னர் “ஊசுஐடீ” என்றழைக்கப்படும்) வரவேற்கிறோம். இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இவ்விணையத்தள பாவனை சம்பந்தமான பின்வரும் விதிகளையும் நிபந்தனைகளையும் (இதன் பின்னர் “விதிகளும் நிபந்தனைகளும்” என அழைக்கப்படும்) பின்பற்றி அவற்றிற்கு கட்டுப்பட்டு நடக்க உடன்படுகிறீர்கள். அத்துடன் ஊசுஐடீக்கு எதிராக தீங்கியல் அல்லது சட்டச் செயற்பாடு காரணமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய உரிமை அல்லது உரிமை கோரல்கள் என்பனவற்றைக் கைவிட உடன்படுகின்றீர்கள். மேலும் உங்களுக்கு எவ்வித அறிவித்தலுமின்றி இவ்விதிகளையும் நிபந்தனைகளையும் நாம் மீளாய்வு செய்யலாம்.

  • எந்தவொரு நோக்கத்திற்காகவும் இந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் இதனோடு தொடர்புடைய விடயங்களில் உள்ளடங்கியுள்ள தகவல்களின் பொருந்தக்கூடிய தன்மை குறித்து CRIB எந்தவொரு பிரதிநிதித்துவத்தையோ உத்தரவாதத்தையோ வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்கவில்லை. www.crib.lk எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பக்கங்கள், ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் தொழில் நுட்பத்தவறுகள் அல்லது அச்சுப் பிழைகளைக் கொண்டிருக்கலாம். இந்த இணையத்தளத்திலுள்ள எந்தவொரு ஆவணங்கள், வரைபடங்கள் அல்லது இதனோடு தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக அல்லது அவை அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் எந்நேரத்திலும் முன்னெச்சரிக்கையின்றி எந்த நேரத்திலும் மாற்றங்களை செய்ய ஊசுஐடீ உரிமை கொண்டுள்ளது.
  • இந்த இணையத்தளம், படங்கள் மற்றும் இந்த இணையத்தளத்தின் பக்கங்களிலுள்ள அனைத்து தகவல்களும் CRIBஇன் சொத்தாகும். அவை இலங்கையின் புலமைச்சொத்து சட்டங்களினால் பாதுகாக்கப்படுவதோடு அவற்றின் எந்த பகுதியும் உரை, படங்கள், ஓடியோ மற்றும் வீடியோ உட்பட சகலதும் இங்கே கொடுக்கப்படடுள்ள முறையில் தவிர ஊசுஐடீ இன் வெளிப்படையான எழுத்து மூலமான அனுமதியின்றி எந்த வகையிலும் எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட முடியாது. அவ்வாறு பயன்படுத்துவோர்; தமது தனிப்பட்ட அல்லது வணிக நோக்கற்ற பயன்பாட்டிற்காக மேற்கூறிய எந்தவொரு பக்கத்தின் பிரதியையும் அவற்றின் பதிப்புரிமை அறிவித்தல்கள், வர்த்தகக் குறியீடுகள், இலச்சினை அல்லது ஏனைய உரித்துள்ள அறிவித்தல்கள் எதனையும் அகற்றாமலும், திருத்தம் அல்லது மாற்றம் செய்யாமலும் அச்சிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இணையத் தளத்திலுள்ள எந்தவொரு விடயத்தையும் பயன்படுத்துவோர் ஊசுஐடீ இன் எழுத்து மூலமான சம்மதமின்றி அதனை பிரதி செய்யவோ, மாற்றம் செய்யவோ, விற்பனை செய்யவோ, வினியோகிக்கவோ, மாற்றியமைக்கவோ, வெளியிடவோ, வடிவமைக்கவோ, மீள் பதிப்புச் செய்யவோ அல்லது வேறு வகையிலோ பயன்படுத்தக்கூடாது.
  • இந்த இணையத்தளத்தை பயன் படுத்தும் போது அவ்வாறு நீங்கள் பயன்படுத்துவது உங்களது சொந்த ஆபத்திலேயே என்பதை ஏற்றுக்கொண்டு உடன்படுகின்றீர்கள். ஏந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊசுஐடீ மற்றும் ஃ அல்லது அதன் சேவை வழங்குனர் மற்றும் ஃ அல்லது இந்த இணையத்தளத்தை உருவாக்குதல், தயாரித்தல், வழங்குதல், நேரடியான, தற்செயலான, விஷேடமான, எதிர் விளைவு காரணமான, மறைமுகமான, முன்மாதிரியான அல்லது தண்டிக்கப்படக்கூடிய சேதங்கள் அல்லது ஏதேனும் இழப்புக்கள், செலவுகள் அல்லது வேறு விதமான செலவினங்களையும் ஏற்படுத்துவதில் ஈடுபட்டுள்ள தரப்பினர் (இழக்கப்பட்ட இலாபம், வருவாய் அல்லது தரவு, பண இழப்பு, சட்ட ஆலோசனை கட்டணங்கள், நிபுணத்துவ சேவை கட்டணங்கள் அல்லது வேறு ஏதேனும் தள்ளுபடிகள் உட்பட) இவ்விணையத்தளத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக, அணுகல், பயன்படுத்துதல், இணையத்தளத்தில் உலாவருதல் அல்லது ஏதேனும் ஒரு விடயம், தரவு, உரை, படங்கள், வீடியோ அல்லது ஓடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்தல் (வைரஸ், பிழைகள், மனித நடவடிக்கை அல்லது செயலற்ற தன்மை அல்லது கணிணி அமைப்பு, தொலைபேசி இணைப்பு, வன்பொருள், மென்பொருள் அல்லது நிகழ்ச்சி செயலிழப்பு அல்லது வேறு ஏதேனும் பிழை, கணிணி பரிமாற்றங்கள் பிணைய இணைப்புக்கள் அல்லது செயற்படாமை அல்லது தாமதம் காரணாக ஏற்படக்கூடிய சேதங்கள் உட்பட) ஆகியவற்றிற்காக பொறுப்பாளியாக மாட்டார்கள்.
  • இந்த இணையத்தளத்தில் உள்ள விபரங்கள், கட்டுரைகள், எடுத்துக்காட்டுக்கள், மற்றும் வேறு ஏதேனும் தகவல்கள் அவ்வப்போது புதுப்பித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனினும் இந்த இணையத்தளத்திலுள்ள அனைத்து தகவல்களும் துல்லியமானவையும், பூரணமானவையும் உரிய நேரத்தில் உள்ளன எனவும் அவை நம்பகரமான மூலங்களிலிருந்து பெறப்பட்டன என்பதையும் உறுதிப்படுத்த ஊசுஐடீ நியாயமான சகல முயற்சிகளையும் எடுக்கும் அதே வேளையில், துல்லியமானதென்பதற்கு உத்தரவாதமளிக்காது. அத்துடன் அத்தகைய தகவல்கள் துல்லியமானவையென்றோ, பூரணமானதென்றோ, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லது ஏதேனும் சந்தர்ப்பங்களில் உரிய நேரத்தில் உள்ளன என்று பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது உத்தரவாதம் அளிக்வோ மாட்டாது. இணையத்தள விதி அல்லது நியதிச்சட்ட உரைகளில் காணப்படும் தவறுகளுக்கு அல்லது குறைகளுக்கு ஊசுஐடீ எந்த பொறுப்பையும் ஏற்காது. அத்தகைய தகவல்களை நம்புவதற்கு முன்னர் எப்போதும் அத்தகைய விதிகள் அல்லது நியதிச்சட்டங்களின் அதிகார பூர்வ நூல்களை குறிப்பிட்டு உறுதிப்படுத்த வேண்டும். இந்த இணையத்தளத்திலுள்ள தகவல்கள் யாவும் முழுமையானதென்றோ, துல்லியமானதென்றோ, உரிய நேரத்திலானவை என்றோ அல்லது இத்தகவலானது பயன்பாட்டின் மூலமான பெறுபேறு என்றோ அல்லது எவ்வித உத்தரவாதமும் அற்றதென்றோ, வெளிப்படையானதென்றோ அல்லது மறைமுகமானதென்றோ (செயற்பாட்டு உத்தரவாதங்கள், வணிகத்தன்மை, ஒரு நோக்கத்திற்கான பொருத்தம், தலைப்பு மற்றும் மீறல் என்பன உட்பட) எவ்வித உத்தரவாதமும் இன்றி அவ்வாறே தரப்பட்டுள்ளன.
  • இந்த இணையத்தளத்தின் தகவல்கள் எத்தயை சூழ்நிலைகளிலும் சட்ட ஆலோசகரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டக்காட்டலுக்கு பதிலீடாக பயன்படுத்துவதற்காக அல்ல.
  • இந்த இணையத்தளம் ஏனைய வலைலத்தளங்களுடன் இணைக்கப் பட்டிருந்தாலும் குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி ஊசுஐடீ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவ்வாறு இணைக்கப்பட்ட வலைத்தளங்களுடன் எந்தவொரு அனுமதியையோ, இணைப்பையோ, அனுசணையையோ, ஒப்புதலையோ அல்லது இணைப்பையோ ஏற்படுத்தவில்லை. இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்த இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சகல வலைத்தளங்களையும் CRIB மீளாய்வு செய்யவில்லை என்பதையும் இதற்கப்;பாற்பட்ட வலைத்தளங்களின் உள்ளடக்கங்களுக்கு அல்லது இவ்விணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஏனைய இணையத் தளங்களுக்கு பொறுப்பாளியல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதோடு உடன்படுகின்றீர்கள்.
  • இந்த பிரமாணங்களையும் நிபந்தனைகளையும் எந்நேரத்திலும் எக்காரணத்திற் காகவும் மீளாய்வு செய்வதற்கு CRIBக்கு உரிமையுண்டு. ஆனால் அவை மட்டுமன்றி விவரக்குறிப்புக்கள், பாகங்கள், மாதிரிகள் விடயங்கள், அல்லது வேறு ஏதேனும் தயாரிப்பு அல்லது சேவை அம்சங்கள் உள்ளடங்கலாக இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்படடுள்ள எந்தவொரு தகவலைலயும் அறிவித்தலின்றி அல்லது கடப்பாடின்றி எந்நேரத்திலும் மாற்றங்களை செய்வதற்கும் உரிமையுண்டு. இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய மீளாய்வுகளுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என நீங்கள் ஒப்புக்கொள்வதோடு உடன்படுகின்றீர்கள்.

இந்த வலைத்தளத்துடன் தொடர்பு கொள்ளும் தனிநபர்களின் தனியுரிமையை CRIB மதிக்கிறது மற்றும் நீங்கள் இந்த வலைத்தளத்தைப் பார்வையிடும்போது உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரித்து பயன்படுத்துகிறோம் என்பதை விளக்கும் தனியுரிமைக் கொள்கையை வகுத்துள்ளது. கொள்கையை இங்கே அணுகலாம்.