பெறுமதி சேர் சேவைகள்

கொடுகடன் தகவல் பணியகம் கடன் அறிக்கைகளை வெளியிடுவதற்கு மேலதிகமாக, அதன் அங்கத்துவர்களுக்கு பெறுமதி சேர் திட்டங்களையும், சேவைகளையும் (VAPS) வழங்குகின்றது. மேலும், கடன் வழங்கும் நிறுவனங்களின் உள்ளக கடன் அபாய முகாமைத்துவ செயன்முறைகளின் செயற்திறனை உயர்த்தும் பொருட்டு எழுச்சியடைந்துவரும் சந்தைத் தேவைகளுடன் இணைந்த விதத்தில் அதிகளவிலான பெறுமதிசேர் திட்டங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை அறிமுகம் செய்து வைப்பதற்கு அது திட்டமிட்டுள்ளது.


கூட்டு வேண்டுகோள் (Bulk Request)
  • இது கொடுகடன் தகவல் பணியகத்தினால் அதன் அங்கத்துவ நிறுவனங்களுக்கு கடன் அறிக்கைகள் தொடர்பான அவற்றின் வேண்டுகோள்களை இணையம் சாராத விதத்தில் முறைப்படுத்துவதற்கு வழங்கப்படும் ஒரு சேவையாகும். இது அவர்களுடைய செயற்பாட்டு மேந்தலைச் செலவுகளை குறைக்கும். இச்சேவை அடிப்படையில் ஓர் அங்கத்துவ நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளர்களின் கடன் தொகுப்புக்களை காலத்திற்கு காலம் மீளாய்வு செய்வதற்கென பயன்படுத்தப்படுகின்றது.

நேரடி வேண்டுகோள் (Live Request)
  • இது கொடுகடன் தகவல் பணியகத்தினால் அதன் அங்கத்துவ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு சேவையாக இருந்து வருவதுடன், இதன் மூலம் அங்கத்துவ நிறுவனத்தின் இணைய வங்கித் தொழில் கடன் தோற்ற முறைமை CRIMS உடன் தொடர்ச்சியாக இணைக்கப்பட முடியும். இது விரைவான மற்றும் உயர் செயற்திறன் மிக்க கடன் தீர்மானங்களை இயலச் செய்கின்றது.

இணையத்தின் ஊடாக உடன் செய்திகளை அனுப்புதல் (e-Alerts)
  • இணையத்திற்கு ஊடாக உடன் செய்திகளை அனுப்பும் முறை (e-Alerts) கடன் தொகுப்புக்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை - அதாவது ஒரு கடனின் நிலையில் ஏற்பட்டுவரும் மாற்றம், மேலதிக புதிய கடன் வசதிகள் சேர்க்கப்படுதல் முதலிய மாற்றங்களை - கண்டறிவதற்கு உதவுவதுடன், கடன் பெறுநர்கள் தற்போது வாடிக்கையாளர்களாக இருந்து வரும் ஏனைய கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மேற்கொள்கின்றது.