பிணக்குகளை தீர்த்துவைக்கும் செயன்முறை

ஒரு கடன் அறிக்கையில் (MyReport) காணப்படும் ஏதேனும் முரண்பாட்டை அல்லது தவறான தகவலை வாடிக்கையாளர் ஒரு பிணக்காக கருத முடியும். ஒவ்வொரு சுய விசாரணை கடன் அறிக்கையுடனும் இணைக்கப்பட்டிருக்கும் பிணக்குகளை கையாளும் படிவத்தை (DHF) பயன்படுத்துவதன் மூலம் ஒரு பிணக்கு முன்வைக்கப்பட முடியும். இந்த பிணக்குகளை கையாளும் படிவம் கிடைக்கப் பெற்றதும், கொடுகடன் தகவல் பணியகம் தரவுகளை அறிக்கையிடும் நிறுவனத்திடம் இந்தப் பிணக்கை முன்வைக்கும். தீர்த்து வைப்பதற்கு பொறுப்பான் உத்தியோகத்தருக்கு சம்பந்தப்பட்ட தரப்பு விரும்பும் விதத்தில் மின்னஞ்சலின் ஊடாக அல்லது கடிதம் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்படும். அறிக்கையிடும் நிறுவனத்தின் உத்தியோகத்தரிடமிருந்து பிணக்குத் தீர்வு கிடைத்த பின்னர் கொடுகடன் தகவல் பணியகம் பிணக்கை முடித்து வைத்து, சம்பந்தப்பட்ட தரப்புக்கு / தரப்புக்களுக்கு இலவசமாக திருத்தப்பட்ட சுய விசாரணை கடன் அறிக்கை (MyReport) ஒன்றை வழங்கும்.

பிணக்குகளை தீர்த்துவைக்கும் செயன்முறை தொடர்பான பொதுவான வழிகாட்டுதல்கள்
  • சுய விசாரணை கடன் அறிக்கையை (MyReport) பெற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே ஒரு பிணக்கை முன்வைக்க முடியும்.
  • கடனளிப்பு நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருக்கும் கடன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு பிணக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  • ஒரு பிணக்கு எப்பொழுதும் MyReport இல் காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே எழுப்பப்படுதல் வேண்டும்.
  • ஒரு பிணக்கு எப்பொழுதும் “பிணக்குகளை கையாளும் படிவம்” என அழைக்கப்படும் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட படிவத்திற்கு ஊடாகவே சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்; அதனை நிரூபிக்கக்கூடிய கூடிய துணை ஆவணங்கள் இணைக்கப்படுதல் வேண்டும்.
  • ஒருவர் தனது MyReport அடிப்படையாகக் கொண்டு மற்றொரு வாடிக்கையாளரின் MyReport சார்பில் ஒரு பிணக்கை எழுப்ப முடியாது.
  • நிறுவனத் துறையின் சுய விசாரணை கடன் அறிக்கை ஒன்று தொடர்பான ஒரு பிணக்கு, அந்தக் கடன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு வேண்டுகோள் விடுத்த (உரிமையாளர் / பங்காளர் / பணிப்பாளர்) அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பதாரர் ஒருவரால் மட்டுமே முன்வைக்கப்பட முடியும்.
  • பிணக்கை கையாளும் படிவத்தில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் பிணக்கு தொடர்பான விபரங்கள், சம்பந்தப்பட்ட சுய விசாரணை கடன் அறிக்கையின் தகவல்களுடன் எப்பொழுதும் பொருந்துபவையாக இருந்து வருதல் வேண்டும்.
  • உரிய விதத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பிணக்கை கையாளும் படிவம் MyReport வழங்கப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் பணியகத்தின் அலுவலகத்திற்கு கிடைத்தல் வேண்டும்.
  • MyReport வழங்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்கு பின்னர் கிடைக்கும் எவையேனும் பிணக்குகளை கையாளும் படிவம் நிராகரிக்கப்படுவதுடன், அது தொடர்பாக பணியகத்தினால் MyReport வாடிக்கையாளருக்கு அறிவித்தல் வழங்கப்படும்.
  • நடப்பு மாதம் தொடர்பான கொடுக்கல் வாங்கலை (கொடுக்கல் வாங்கல்களை) புதுப்பிக்காமைக்கு எதிராக மற்றும் MyReport இல் உள்ளடக்கப்படாத கடன் தகவல்கள் தொடர்பாக அல்லது உள்ளடக்கப்பட வேண்டிய கடன் தகவல்கள் தொடர்பாக ஒரு பிணக்கை முன்வைக்க முடியாது.
  • கொடுகடன் தகவல் பணியகம் MyReport வாடிக்கையாளருக்கு பிணக்கு கிடைத்தமை தொடர்பாக அறிவிப்பதுடன், அப்பிணக்கு உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட கடனளிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கும்.
  • பிணக்குத் தீர்வு சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனத்தின் பின்னூட்டத்தில் / நடவடிக்கையில் / தீர்மானத்தில் / எதிர்வினையில் முழுவதுமாக தங்கியிருந்து வரும் காரணத்தினால் பிணக்கொன்றை தீர்த்து வைப்பதற்கு ஆகக் குறைந்தது 14 நாட்கள் காலப் பிரிவு தேவைப்படும்.
  • பிணக்கு தீர்த்து வைக்கப்பட்ட பின்னர், திருத்தப்பட்ட சுய விசாரணை கடன் அறிக்கை (MyReport) இலவசமாக வழங்கப்படும். திருத்தப்பட்ட MyReport ஐ அடிப்படையாக கொண்டு ஒரு பிணக்கை எழுப்ப முடியாது.