இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் பிரதான கடமைகள்

பணியகத்தின் செயற்பாடுகள்

(1995ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 2008ஆம் ஆண்டின் 42ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றால் திருத்தப்பட்டவாறான) 1990ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை கொடுகடன் தகவல் பணியக சட்டத்தின் பிரகாரம் இப்பணியகத்தின் செற்பாடுகள் வருமாறு:

  • கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன் பெறுனர்கள் மற்றும் கடன் பெற எதிர்பார்ப்பவர்கள் ஆகியோர் தொடர்பான வர்த்தக, கடன் மற்றும் நிதித் தகவல்களை சேகரித்து, ஒப்பிட்டுத் தொகுத்து, உரியவிதத்தில் இணைத்தல்.
  • கடன் வழங்குவதில் ஈடுபட்டிருக்கும் பங்குதாரர் நிறுவனங்களுக்கு வேண்டுகோளின் பேரில் கடன் தகவல்களை வழங்குதல், அதே வேளையில், அந்த தகவல்களுடன் சம்பந்தப்பட்ட கடன் பெறுநர்களுக்கு அவற்றை வழங்குதல் மற்றும் நிதித் துறையில் கடன் ஒழுக்காற்றினை ஸ்தாபித்தல்.
  • இலங்கையில் கடன் குறியீட்டு முறைமை (Credit Rating Syetem) ஒன்றை ஸ்தாபித்தல். கடன் குறியீட்டுப் பணியை பொறுப்பேற்றல் மற்றும் எவையேனும் வெளிநாட்டு அல்லது உள்ளுர் முகவர்களுக்கு அல்லது அத்தகைய குறியீடுகள் தொடர்பாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கும் எவரேனும் நபருக்கு அத்தகைய கடன் குறியீடுகளை விற்பனை செய்தல்.
  • பணியகத்தின் அங்கத்தவர் கடன் வழங்கும் நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில் தனிநபர் அல்லது வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான கொடுகடன் புள்ளியிடல்களை (Credit Score) வழங்குதல் மற்றும் ஏனைய பெறுமதிசேர் சேவைகளை பெற்றுக்கொடுத்தல்
  • பங்குதாரர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கென ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கருத்திட்டங்களை பொறுப்பேற்றல்.
  • பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும், குறிப்பாக முறைசாரத் துறைக்கு கடன்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு அனுசரணை வழங்கும் நோக்குடன் அசையும் சொத்துக்களை பிணையாக வைத்து பெறப்பட்டிருக்கும் கடன்களை பதிவு செய்வதற்கு பிணையுடன் கூடிய கொடுக்கல் வாங்கல்களுக்கான முறை ஒன்றை இயக்குதல்.