இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB)தென்னாசிய பிராந்தியத்தின் முதலாவது கொடுகடன் தகவல் பணியகமாகும். அது கொடுகடன் பணியகச் சட்டத்தினால் (2008ஆம் ஆண்டின் 42ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1995ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றினால் திருத்தப்பட்டவாறான) 1990ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க கொடு கடன் பணியகச்சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க

CRIB என அழைக்கப்படும் இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட உரிமம் பெற்ற கடன் நிறுவனங்களிலிருந்து கடன் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் திரட்டுவதற்கு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தகவல் சேவை வழங்குநர் நிறுவனமாகும். அந்த கடன் வழங்கும் நிறுவனங்கள் இப்பணியகத்தில் பங்குதாரர்களாகவும் இருந்து வருகின்றன. இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அத்தகைய தகவல்களை கடனளிப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் பயனுள்ள முறையில் தொகுத்து வழங்குகின்றன.
இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் பெறுபவர்கள் ஆகியோருக்கிடையில் நிலவிவரும் தகவல் இடைவெளியை நிரப்புவதற்கு வசதி செய்து கொடுக்கும் ஒரு நிர்ணயகரமான பாத்திரத்தை வகித்து வருகின்றது. அந்த நிலையில், கொடுகடன் மதிப்பீட்டில் அபாய முகாமைத்துவம் பெருமளவுக்கு விருப்பு வெறுப்பற்றதாகவும், விவேக பூர்வமானதாகவும் மேற்கொள்ளப்படுகின்றது.
உள்ளுர் பொருளாதாரங்களின் உட்பிரதேசங்களுக்கு கொடுகடன்களின் விஸ்தரிப்புக்கு அனுசரனை வழங்குவதில் இப்பணியகம் முனைப்பான ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் அது ஒழுக்காற்றுடன் கூடிய கொடுகடன் கலாசாரம் ஒன்றை தூண்டுவதுடன், நிதி அமைப்பில் போட்டித் திறன் மற்றும் உறுதிப்பாடு என்பவற்றை உருவாக்கிக் கொள்வதற்கும் உதவுகின்றது.
மேலும் வாசிக்க
பக்கச்சார்பற்ற அறிக்கை
கடுமையான நடத்தை விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது
பொறுப்பான நிதி நடைமுறைகளை ஊக்குவிக்கிறது
நிதி ஆராய்ச்சிக்கான தரவின் துல்லியமான சேகரிப்பு
இலங்கையின் நிதி ஆரோக்கியத்தை கண்காணிப்பதில் மைய புள்ளி
-
அது பல்வேறு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களால் தொகுக்கப்பட்ட, கடன்களை திருப்பிச் செலுத்தியிருக்கும் உங்கள் வரலாற்றின் ஒரு பதிவாக உள்ளது.
-
உங்களுடைய கடன் தகுதியினை மதிப்பீடு செய்து கொள்ளும் பொருட்டு கடன் வழங்குபவர்கள் உங்கள் கடன் தகவல்களை பரீட்சித்துப் பார்க்கின்றார்கள். கடன்களை திருப்பிச் செலுத்தும் ஒரு நல்ல வரலாற்றைக் கொண்டிருக்கும் பொழுது இலகுவாக சலுகை நியதிகளில், விரைவாக கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
-
உங்களுடைய கடன் அறிக்கையை தொடர்ச்சியாக மீளாய்வு செய்வது ஏதேனும் தவறான தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதனை தெரிந்து கொள்வதற்கு உதவுவதுடன், அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பையும் உங்களுக்கு வழங்குகின்றது.
-
அது கடன் வழங்குபவர்கள் விரைவாகவும், விருப்பு வெறுப்பற்ற விதத்திலும் சிறந்த கடனளிப்பு முடிவுகளை எடுப்பதற்கு உதவுகின்றது.
-
கடன் வழங்குநர்களுக்கு மத்தியில் பெருமளவுக்கு போட்டித் தன்மையுடன் கூடிய கொடுகடன் சந்தை ஒன்றை அது உருவாக்குகின்றது.
-
பொறுப்புமிக்க வாடிக்கையாளர்கள் கடன் நிறுவனங்களிலிருந்து விரைவான மற்றும் பெருமளவுக்கு போட்டித் திறன் கொண்ட ஒரு சேவையை எதிர்பார்க்க முடியும்.